‘காக்க காக்க’ அந்த நடிகர்தான் பண்ணனும்னு சூர்யா சொன்னாரு.. அவரே எதிர்பார்க்காத மேஜிக்

by ROHINI |
surya
X

surya

சூர்யாவின் கெரியரில் ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் காக்க காக்க. அதுவரை லவ்வர் பாயாக சாதுவான முகத்துடனேயே சுற்றிக் கொண்டிருந்த சூர்யாவை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டிய திரைப்படம் காக்க காக்க. நந்தா படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தாலும் காக்க காக்க திரைப்படம்தான் அவருக்கு ஒரு வரவேற்பை கொடுத்த படமாக மாறியது.

ஒரு பக்கம் ஆக்‌ஷன், ஒரு பக்கம் ரொமான்ஸ் என பெண் ரசிகைகளை மொத்தமாக தன் பக்கம் இழுத்தது இந்த படத்தின் மூலமாகத்தான். சொல்லப் போனால் போலீஸை பார்த்ததும் பெண்களுக்கு பிடித்தது என்றால் காக்க காக்க படத்தில் சூர்யா போலீஸ் கேரக்டரில் நடித்த பிறகுதான் பிடிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு ஃபிரேமுமே சூர்யாவை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

அது கௌதம் மேனன் செய்த மேஜிக்தான். ஆனால் இந்தப் பட வாய்ப்பு சூர்யாவுக்கு வந்த போது எனக்கு இது செட்டாகாது. இதில் மாதவன் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என ஆரம்பத்தில் சூர்யா சொல்லியிருக்கிறார். ஏனெனில் ரன் படம் வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நேரம். சூர்யாவுமே மௌனம் பேசியதே படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் காக்க காக்க திரைப்படத்தின் வாய்ப்பும் வந்திருக்கிறது.

கதையை கேட்டதுமே சூர்யா திணறிவிட்டாராம். இது என்னால் பண்ண முடியுமா என்றெல்லாம் கேட்டிருக்கிறார். ஆனால் கௌதம் மேனன் தான் நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும் ஏனெனில் இதற்கு முன் நந்தா படத்தில் நடித்திருக்கிறீர்கள். உங்களை ஒரு ரக்கடு பாயாகத்தான் பார்த்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் இந்தப் படத்தில் நடித்தால் என்ன மாதிரி நடித்திருப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்று கூறியிருக்கிறார்.

maddy

அவர் சொன்னதை போல் நடிக்க சூர்யாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதன் பிறகு அந்தவொரு மேஜிக் நடந்தது. சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்குமான நெருக்கமும் அதிகமானது.

Next Story