7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடிக்கவிருந்த சூர்யா!.. என்னப்பா சொல்றீங்க!...
7G Rainbow colony: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் 2004ம் வருடம் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவி கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தில்தான் சோனியா அகர்வால் அறிமுகமானார்.
படிப்பு சரியாக ஏறாமல் அப்பா அம்மா பேச்சை கேட்காமல் சிகரெட், சரக்கு என ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்றும் வாலிபனின் வாழ்க்கையில் ஒரு பெண் வருகிறாள். அவள் மீது அவனுக்கு காதல் வர என்ன ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் ரவி நன்றாகவே நடித்திருந்தார்.
நடித்தார் என்பதை விட அவரை செல்வ ராகவன் நடிக்க வைத்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மனதை கணக்க வைக்கும் வகையில் அமைத்திருந்தார் செல்வ ராகவன். இந்த படத்தின் போஸ்டர் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனாலும், இப்படம் இளசுகளிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு அற்புதமான இசையை கொடுத்திருந்தார் யுவன் சங்கர் ராஜா. அனைத்து பாடல்களையும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார். கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை, கனா காணும் காலங்கள், நினைத்து நினைத்து பார்த்தேன் என எல்லா பாடல்களுமே மனதை மயக்கும் பாடல்கள்தான்.
செல்வராகவனின் இயக்கத்தில் உருவான சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்திற்கு பின் ரவி சில படங்களில் நடித்தார். ஆனால், வொர்க் அவுட் ஆகவில்லை. இப்போது ரவி எந்த படத்திலும் நடிப்பதில்லை. இந்நிலையில்தான், இந்த படம் பற்றிய ஒரு முக்கிய தகவலை அவர் ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
7ஜி ரெயின்போ காலனி படத்தில் எனக்கு முன்னாடி சூர்யா இல்லனா மாதவன் தான் நடிக்கிறதா இருந்தது. ஆனால், காக்க காக்க, பிதாமகன் என அவர் பிஸியாக நடித்து கொண்டிருந்தார். மாதவன் பிரியமான தோழி படத்தில் பிசியா இருந்தார். அதனால்தான் அந்த படத்தில் நான் நடித்தேன். அதேமாதிரி முதலில் அந்த படத்தில் சுப்பிரமணிய புரம் நடிகை சுவாதி நடிப்பதாக இருந்தது. ஆனால், அது நடக்காமல் போகவே சோனியா அகர்வால் நடித்தார்’ என சொல்லி இருக்கிறார்.