Suriya47: மீண்டும் கோலிவுட் வரும் மல்லுவுட் நடிகை… சூர்யா 47 படத்தின் பக்கா அப்டேட்!
Suriya47: பிரபல நடிகர் சூர்யாவின் 47வது படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டில் சூரரைப் போற்று, ஜெய்பீம் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் சூர்யா. ஆனால் அந்த மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ளாமல் உடனடியாக தன்னுடைய வழியை பாலிவுட் பக்கம் மாற்றினார். அங்கு கதை கேட்டு வந்தார்.
ஓம் பிரகாஷ் இயக்கத்தி்ல் கர்ணன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா பல மொழிகளில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்தியில் நிறைய திரையில் வெளியிடப்பட்ட இப்படம் வசூலை பெரிய அளவில் குவிக்கவில்லை.
இதனால் சூர்யாவின் பாலிவுட் படமும் கை நழுவியது. கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடிக்க தற்போது சூர்யா அதீத முயற்சியை எடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற மொழி இயக்குனர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வருகிறார்.
மிகப்பெரிய வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்பட்ட ரெட்ரோ திரைப்படமும் சுமார் வெற்றியை மட்டுமே பெற்றது. இதை தொடர்ந்து தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான விவாதத்தில் சூர்யா ஈடுபட்டு இருக்கிறார்.
அந்த வகையில் மலையாளத்தில் ஆவேசம் படத்தினை இயக்கிய ஜித்து மாதவன் சூர்யா47ஐ இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் பேச்சுவார்த்தை முடிந்து இருக்கும் நிலையில் ஜித்து மாதவன் கதை விவாதத்திற்காக சென்னையில் அடுத்த 6 மாதம் இருப்பார் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் ஹீரோயினாக நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து இருக்கிறது. மேலும் இப்படத்தில் சூர்யா போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதால் இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த புறநானூறு படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.
