சூர்யா 44 படத்தில் டைட்டில் இதுவா?.. இது தலைவர் பட பெயராச்சே.. வொர்க்அவுட் ஆகுமா?..

by Ramya |
johny
X

johny

நடிகர் சூர்யா: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா இரண்டு ஆண்டுகள் மெனக்கெட்டு நடித்தார். ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இதனால் நிச்சயம் கங்குவா திரைப்படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் மிகவும் மெனக்கட்ட நடித்திருந்தார் நடிகர் சூர்யா. இந்த திரைப்படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைப்படத்தையும் இவர் கமிட் செய்யவில்லை. இருப்பினும் படம் வெளியாகி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் ட்ரோல்களில் சிக்கியது. இந்த திரைப்படத்தின் தோல்வி நடிகர் சூர்யாவை மிகப் பெரிய அளவில் பாதித்தது. இருப்பினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


சூர்யா 44:

கங்குவா திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சூர்யா இணைந்த திரைப்படம் சூர்யா44. இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார். மேலும் பூஜா ஹெக்டே திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் காதல் கலந்த ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகின்றது. படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த திரைப்படம் வருகிற கோடை பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறியிருந்தார். அதற்கேற்ப இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

அதன்படி வரும் 25ம் தேதி நாளை கிறிஸ்மஸ் பரிசாக இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கின்றார். சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் சரியாக சொதப்பிய நிலையில் நிச்சயம் இந்த திரைப்படமாவது ஹிட் படமாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.


படத்தின் டைட்டில்:

படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியானதிலிருந்து படத்தின் டைட்டில் இதுதான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதன்படி இந்த படத்திற்கு ஜானி என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் ஜானி என்கின்ற படத்தின் டைட்டில் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் டைட்டில் ஆகும்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதே போல் சூர்யா 44 திரைப்படமும் வெற்றி பெறும் என்று கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் சூர்யாவின் கெட்டப்புக்கு இந்த பெயர் சரியாக பொருத்தமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Next Story