சூர்யா 45 படத்தின் விறுவிறுப்பான கதைகளம் இதுதான்... கேமியோ ரோலில் விஜய் சேதுபதி..!

by Sankaran |   ( Updated:2024-12-12 02:31:02  )
சூர்யா 45
X

சூர்யா 45

சூர்யா 44வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வருகிறார். இது காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

சூர்யா 45

அடுத்து சூர்யா 45 படமும் தயாராகி வருகிறது. படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் வந்துள்ளன. எதிரும் புதிருமான துருவங்களில் சூர்யா, திரிஷா நடிக்கும் சூர்யாவின் 45வது படத்தின் கதைகளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய மேலும் விவரங்களைப் பார்ப்போம்.

கதை

நீதிமன்றம் மற்றும் கோவில்களை மையமாக வைத்து கதை நகர்கிறது. சூர்யா, திரிஷா வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் எதிராக வாதாடுகிறார்கள். மிகவும் சுவாரசியமான கதைகளமாகத் தெரிகிறது.

படப்பிடிப்பு


ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரிஷா ஜோடியாக நடிக்கிறார்.

சாய் அபியங்கர்

ஏ.ஆர்.ரகுமான் முதலில் இசை அமைப்பதாக இருந்தது. அவர் தனது விவாகரத்து காரணங்களால் விலகிக் கொண்டார். தற்போது சாய் அபியங்கர் இசை அமைக்க உள்ளார். இதைப் படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் சில ஆல்பங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் பென்ஸ் படத்துக்கும் இவர்தான் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா 45 படத்தைப் பற்றி புதுத்தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

விஜய்சேதுபதி


படத்தில் கேமியோ ரோலில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிய வருகிறது. 2024ல் அவருக்கு வெளியான மகாராஜா படத்தின் மூலம் 100 கோடியை அள்ளிய வசூல் நாயகன் லிஸ்டில் அவரும் இணைந்துள்ளார். விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்தைப் பொருத்தவரை இந்த சூர்யா 45 படமும் தனித்துவமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் திரைக்கதையைப் பார்த்து பார்த்து சுவாரசியம் குறையாமல் வடிவமைத்து வருகிறார்கள்.

Next Story