1. Home
  2. Cinema News

Karuppu: அட்லீ பாணியில் ‘கருப்பு’ திரைப்படமா? மிகுந்த மன உளைச்சலில் சூர்யா?

Karuppu: அட்லீ பாணியில் ‘கருப்பு’ திரைப்படமா? மிகுந்த மன உளைச்சலில் சூர்யா?

Karuppu Movie:

சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சாய் அபயங்கர் இந்தப் படத்தில் இசையமைக்கிறார். கங்குவா, ரெட்ரோ என தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வந்த சூர்யாவுக்கு இந்தப் படமாவது கைக்கொடுக்குமா என்று ரசிகர்களும்க் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சூர்யா மீது ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சி ரசிகர்களிடையே இருந்து வருவதாகவே தெரிகிறது. சோசியல் மீடியாக்களில் அவர் மீது கடுமையான வன்மத்தை கக்கி வருகின்றனர். காந்தாரா2 வெளியான பிறகு ஒரு சிலர் படத்தை பார்த்துவிட்டு கங்குவா படத்தின் சில காட்சிகளை ஒன்றியதாகவே காந்தாரா 2 இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

காந்தாரா 2 படத்தை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள் ஏன் கங்குவா படத்தை கொண்டாடவில்லை? எதிர்மறையான விமர்சனத்தையே முன் வைக்க காரணம் என்ன என்றெல்லாம் இப்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கார்த்திக் சுப்பராஜ் இதுவரைக்கும் நல்ல படங்களையே கொடுத்து வந்தார். ஆனால் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ரெட்ரோ திரைப்படம் சொதப்பிவிட்டதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

அதனால் இனிமேலாவது ஜாக்கிரதையாக கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் சூர்யா இறங்கியிருப்பார். அந்த வரிசையில் கருப்பு திரைப்படம் எப்படிப்பட்ட திரைப்படமாக வரப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கேற்ப கருப்பு திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் சோசியல் மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அதாவது 1978 ஆம் ஆண்டு வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்தை பட்டி டிக்கரிங் எல்லாம் பார்த்து அட்லீ பாணியில் ஆர்ஜே பாலாஜி எடுத்த படம்தான் கருப்பு என்றும் இந்தப் படத்தை அவரே இயக்கி மெயின் வில்லனாகவும் ஆர்ஜே பாலாஜியே நடித்திருக்கிறார் என்றும் சூர்யா வரும் காட்சியை விட ஆர்ஜே பாலாஜி வரும் காட்சிதான் அதிகமாக இருக்கின்றன என்றும் ஒரு தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதனால் சூர்யா தரப்பில் மிகுந்த வருத்ததில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் கதை நல்லா இருந்தால் மட்டுமே அதை கொண்டாடுவார்கள் என்பது உண்மை. இதற்கு அடுத்தபடியாக சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். எப்படியாவது சூர்யாவுக்கு ஒரு மாஸ் ஹிட் கிடைத்துவிடாதா என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.