அந்த படத்தை எப்படி சூர்யா மறுக்கலாம்?… கடும் கோபம் காட்டிய கௌதம் மேனன்… என்ன மேட்டரு?
GVM: இயக்குனர் மற்றும் நடிகரான கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய படத்தை சூர்யா நடிக்காமல் போனது குறித்து கடுமையாக வருத்தம் தெரிவித்து இருப்பது வைரல் ஆகிவருகிறது.
நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரில் முக்கிய படமாக அமைந்தது காக்க மற்றும் வாரணம் ஆயிரம். இப்படத்தை இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியாகும் எல்லா படங்களுமே ஏ சென்சர் ஆடியன்ஸை கவர்ந்து சூப்பர்ஹிட் அடிக்கும்.
அப்படி ஒரு படமாக துருவ நட்சத்திரம் தயாராகி இருக்கிறது. ஆனால் மற்ற படங்களை போல அதுவும் 2018ம் ஆண்டியில் இருந்து இன்னும் பல பைனான்ஷியல் சிக்கல்களால் ரிலீஸுக்கு வரமுடியாமல் தவித்து வருகிறது. இப்படத்தினை தயாரிக்கவும் செய்திருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன்.
துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு நிறைய நடிகர்கள் முடியாது என மறுத்திருக்கின்றனர். அந்த லிஸ்டில் நடிகர் சூர்யாவும் இருப்பது இயக்குனர் கௌதம் மேனனுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் பொதுவாகவே ஒரு கதையை தேர்ந்தெடுத்து மொத்தமாக பேசி பின்னர் தான் ஷூட்டிங் இருக்கு செல்வோம். இது சூர்யாவிற்கும் தெரியும்.
வாரணம் ஆயிரம் மற்றும் காக்க காக்க திரைப்படம் அப்படிதான் உருவானது. அப்படத்தில் அப்பா கேரக்டருக்கு நானா படேகர் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை பேசினோம். ஆனால் அவர் நீங்கள் எனக்கு டப்பிங் செய்வீர்கள். எனக்கு என்னுடைய குரல் தான் பிளஸ் பாயிண்ட் என மறுத்துவிட்டார். அது நியாயமாக இருந்தது.
அப்போது சூர்யா தைரியமாக அப்பாவை இது கேரக்டரில் நடிக்க முன்வந்தார். அப்படிப்பட்ட சூர்யா துருவ நட்சத்திரத்திற்கு மறுத்தது எனக்கு அதிருப்திதான். யார் வேண்டாலும் சொல்லலாம் சூர்யா இதை செய்திருக்க கூடாது. என்ன பட வாய்ப்பா இல்லாமல் போய்விடும்.
நான் தானே புரோடியூசர் எனக்கு தானே பிரச்னை. நானே அழைத்தும் சூர்யா மறுத்துவிட்டார். நான் இன்னும் துருவ நட்சத்திரம் படத்தை பிடித்து வைத்திருப்பதற்கு கடந்த வாரம் எடுத்திருப்பது போல இருக்கும் அந்த பிரஷ் தான் காரணம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.