1. Home
  2. Cinema News

Karuppu First single: ரசிகர்களுக்கு சூர்யா கொடுக்கும் சர்ப்ரைஸ்

karuppu movie

சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது.


தமிழ் சினிமா உலகில் விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் மூல அறிமுகம் ஆனார் அவர். தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் அவருக்கான அடையாளம் கிடைக்கவே இல்லை. நடிக்கவே தெரியவில்லை என்று பலரும் விமர்சனம் செய்தனர். இதெல்லாம் பாலா இயக்கத்தில் நந்தா வரும் வரைதான். நந்தா படம் சூயாவை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது. தொடந்து மௌனம் பேசியதா, ஆறு, சிஙம் என பட்டையை கிளப்பினார்.

சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் வந்த கங்குவா, ரெட்ரோ படங்கள் கூட தோல்வியையே சந்தித்தன. தற்போது சூர்யா நல்ல ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. நிச்சயம் இப்படம் சூர்யவிற்கு ஹிட் லிஸ்டில் சேரும் என்று தெரிகிறது.

karuppu movie

கருப்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை தீபாவளி அன்று வெளியாகிறது. இதனை அப்படக்குழு இன்று அறிவித்துள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த தீபாவளிக்கு சூர்யா படம் வரவில்லை என்றாலும் கருப்பு படத்தின் ஒரு பாடல் வெளிவருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது.   

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.