என் கார்ல கூப்பிட்டேன்! ‘அகரம்’ மூலமாக படிச்ச பையன் வந்த கார் எது தெரியுமா? பெருமையுடன் சூர்யா

by Rohini |
suriya
X

suriya

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. நடிகராக பல வெற்றிகளை அவர் அடைந்தாலும் சமூக சேவை உள்ள மனிதராக மக்கள் மத்தியில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நடிப்பு என்பது அவருடைய தொழில். ஆனால் அவருடைய முக்கிய நோக்கம் தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் ஏராளமான மாணவ மாணவர்களை உருவாக்குவது என்பதுதான். அகரம் பவுண்டேஷன் தொடங்கி இன்றுடன் 15 ஆவது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறது.

அதற்கான விழா இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அது மட்டுமல்ல இந்த அகரம் அறக்கட்டளையின் மூலம் பயனடைந்த மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்களுக்கு கல்லூரி படிப்பை தொடர இந்த அகரம் அறக்கட்டளை உதவி செய்து வருகின்றது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்த ஒரு சேவையை சூர்யா குடும்பம் செயல்படுத்தி வருகிறது. இதில் பயன் அடைந்த பல மாணவர்கள் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர் இன்ஜினியரிங் படித்த ஒரு மாணவி. அவர் திருமணம் ஆகி தற்போது அவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறார். அவர் இன்று மேடையில் பேசும்போது ‘தனக்கு அ போட்டு கொடுத்த சூர்யா அண்ணா இன்று என்னுடைய மகள் பள்ளி படிப்பை தொடர இருக்கிறார்.

அவருக்கும் நீங்கள்தான் அ போட்டு அவருடைய படிப்பை தொடங்க வேண்டும். அவளும் வெற்றி பெற வேண்டும்’ என மிகவும் கண் கலங்கி பேசி இருந்தார். இது சூர்யாவுக்கும் மிகவும் எமோஷனலாக இருந்தது. இந்த நிலையில் சூர்யா அவருடைய அகரம் அறக்கட்டளையில் 2010 ஆம் ஆண்டு படித்த ஒரு மாணவனை பற்றி சூப்பரான தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார். சூர்யா ஒவ்வொரு வருட விடுமுறை தினத்திற்கும் தன்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு அமெரிக்கா போவது வழக்கமாம்.

அப்போது அமெரிக்கா சென்றிருந்த நிலையில் ஒருவர் ‘சூர்யா அண்ணா சூர்யா அண்ணா’ என அழைத்துக் கொண்டே இருந்தாராம். ஆனால் சூர்யா தன்னுடைய குழந்தைகளுடன் இருந்ததனால் அவர்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்வதில் குறியாக இருந்திருக்கிறார் .அதன் பிறகு தன்னுடைய குழந்தைகளை காருக்குள் அனுப்பிவிட்டு தன்னை அழைத்தவரிடம் பேச வந்தாராம்.

அப்போது அந்த நபர் தான் யார் என்பதை கூறியிருக்கிறார். நான் 2010 ஆம் ஆண்டு பேட்ஜ் யோகி எனக் கூறியிருக்கிறார். அதை கேட்டதும் சூர்யாவுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்ததாம். சில நிமிடங்கள் பேசிய பிறகு சூர்யா தன்னுடைய காரிலேயே போகலாம் என அழைத்தாராம். அதற்கு அந்த நபர் ‘இல்லை நான் limousine காரில் வந்திருக்கிறேன்’ எனக் கூறி சூர்யாவை பிரமிக்க வைத்திருக்கிறார். அந்த கார் மிகவும் விலையுயர்ந்த கப்பல் போன்ற வடிவமைப்பை போன்ற கார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story