சூர்யாவுக்குப் பிடித்த நடிகை ஜோதிகா இல்லையாம்!.. ஃபீல்ட் அவுட் நடிகையை சொல்றாரே!...

தமிழ்த்திரை உலகில் காதலில் விழுந்து கல்யாணத்தில் முடிந்து இன்னும் சிறப்பாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கும் தம்பதிகள் வெகுசிலர்தான் உண்டு. அஜீத், ஷாலினி. அடுத்து சூர்யா, ஜோதிகா. இந்த வரிசையில் சூர்யா, ஜோதிகா தம்பதியை பலரும் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல ஜோடிப்பொருத்தம் என உதாரணம் காட்டுவர்.
சூர்யா காக்க காக்க படத்தில் ஜோதிகாவுடன் நெருக்கமாக நடித்து இருந்தார். அதன்பிறகு காதலில் விழுந்து கல்யாணம் வரை போனது. அந்த வகையில் சூர்யாவுக்குப் பிடித்த நடிகை யாருன்னா ஜோதிகாவைத் தானே சொல்ல வேண்டும். ஆனால் இவர் யாரைச் சொன்னாருன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
'உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் மிகவும் பொருத்தமான நடிகை யாரு?'ன்னு சூர்யாகிட்ட கேட்டா அவரு என்ன பதில சொல்வாரு? அந்தக் கேள்விக்கு அவரோட காதல் மனைவியான ஜோதிகாவின் பெயரைச் சொல்வாரு அப்படித்தானே நாம எல்லாரும் எதிர்பார்ப்போம். ஆனா இப்படி ஒரு கேள்வியை நடிகர் சூர்யாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது அவர் தந்த பதில் முற்றிலும் மாறான ஒன்றாக இருந்தது. என்ன சொன்னாருன்னு பாருங்க.
'நீங்க இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட உடனே என் மனசுல பளிச்சுன்னு தோன்றுன நடிகைன்னா அது அனுஷ்கா தான். அவரோட ஒரே ஒரு படத்துல தான் நடிச்சிருக்கேன். ஆனா ஒரு நடிகையோட நாம நடிச்சிக்கிட்டு இருக்கோம்கற உணர்வே என்னால அவரோட அந்தப் படத்துல நடிக்கும்போது பழக முடிந்தது.
படங்கள்ல அழகா இருக்கணும்கறதுக்காக அனுஷ்கா மெனக்கிட்டதை ஒருநாளும் நான் படப்பிடிப்புல பார்த்தது இல்ல. ஆனா இதை எல்லாவற்றையும் தாண்டி படங்கள்ல பார்த்தா அவ்ளோ அழகா இருப்பாங்க. அதுதான் அனுஷ்காவோட ஸ்பெஷாலிட்டி' என்கிறார் நடிகர் சூர்யா.
சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து உயிரிலே கலந்தது, பொன்மகள் வந்தாள், பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், மாயாவி, காக்க, காக்க, சில்லுன்னு ஒரு காதல் உள்பட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளனர். அதே போல சிங்கம் படத்தில் மட்டும்தான் சூர்யா அனுஷ்காவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.