ஆளே மாறிப்போன சூர்யாவின் மகள்.. குடும்பமே கூடிட்டாங்கப்பா

by ROHINI |
surya
X
surya

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் இணைந்து ஜில்லுனு ஒரு காதல், காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார் ,மாயாவி, உயிரில் கலந்தது போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படி படங்களில் ஜோடியாக நடிக்கும் போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2009 ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் அனைவர் முன்னிலையும் நடந்தது. இவர்கள் திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என அத்தனை பேரும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினார்கள். சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு தியா என்னும் மகளும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர் .

தன் பிள்ளைகளின் படிப்புகளுக்காக ஜோதிகா சூர்யா சென்னையில் இருந்து மும்பைக்கு குடிப்பெயர்ந்தனர். இந்த நிலையில் அவருடைய மகள் தியா தனது பள்ளி படிப்பை மும்பையில் முடித்து விட்டார். அதற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் கையில் சான்றிதழுடன் இருக்கும் மகளுடன் சூர்யா ஜோதிகா சிவகுமார் என ஒட்டுமொத்த குடும்பமும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அந்த புகைப்படம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் தியாவை பார்க்கும் பொழுது மிகவும் வளர்ந்த பெண்ணாக சூர்யா ஜோதிகாவுக்கு இணையாக அவர் காணப்படுகிறார். இந்த போட்டோவை பார்த்ததும் இந்த அளவுக்கு தியா வளர்ந்து விட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.


Next Story