ஸ்வாதிகாவை கட்டிப்பிடித்த இயக்குனர்… மாமன் குட்டி பிரபலம் செய்த சேட்டை… யார் தெரியுமா அவரு?

Maman: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் மாமன் திரைப்படத்தில் நடித்த குட்டி பிரபலத்தின் சேட்டை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மாமன். சூரி, ஸ்வாதிகா, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விலங்கு வெப் சீரிஸை இயக்கிய இயக்குனர் இப்படத்தினை இயக்கி இருக்கிறார்.
படம் ரிலீஸுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஒரு மாமனின் பாச போராட்டத்தை கடைக்குட்டி சிங்கம் போல இல்லாவிட்டாலும் எதற்கும் துணிந்தவன் போல மொக்கை பண்ணாமல் பாஸ் மார்க் வாங்கிவிட்டார் இயக்குனர்.
டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் ஜோரா கைய தட்டுங்க உள்ளிட்ட படங்களுடன் போட்டி போட்ட திரைப்படம் பெரிய அளவில் விமர்சனம் குவிக்காமல் ஓரளவு ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது.
இப்படத்தில் சூரியின் அக்கா மகனாக நடித்தவர் இயக்குனர் பிரசாந்தின் மகன் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு நடிகை ஸ்வாதிகா இயக்குனரை கட்டி பிடித்து விட்டு விடை பெற்று இருக்கின்றாராம்.
இதை பார்த்த அந்த குட்டி பையன், ஸ்வாதிகாவை அப்பா கட்டி பிடிச்சிட்டாரும்மா என அவர் அம்மாவுக்கே கால் செய்து இயக்குனரை போட்டு கொடுத்து விட்டாராம். இதை பார்த்த படக்குழு இந்த போன் கதையை கேட்டு சிரித்து கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.