குட் பேட் அக்லி படத்தில் டி.ராஜேந்தர்!.. செம வைப் ஒன்னு இருக்கு!. பரபர அப்டேட்...

by Murugan |
good bad ugly
X

Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. தலைப்பை பார்க்கும்போது இந்த படத்தில் அஜித்துக்கு 3 வேடங்கள் என்பது புரியும். அதில் நல்லவன் ஒருவன், கெட்டவன் ஒருவன். கெட்டவனை விட மோசமான ஒருவன் என 3 கதாபாத்திரங்களில் அஜித் கலக்கி இருக்கிறாராம்.

கேங்ஸ்டர் மூவிஸ்: குட் பேட் அக்லி பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கிறது. கேஜிஎப், புஷ்பா ஆகிய படங்களின் மெகா வெற்றிக்கு பின் கேங்ஸ்டர் படங்கள் அதிகம் உருவாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன் இயக்கிய மார்க் ஆண்டனி படமும் கேங்ஸ்டர் திரைப்படமாகவே உருவாகி சூப்பர் ஹிட் அடித்தது.

அதனால்தான் ஆதிக் மீதுள்ள நம்பிக்கையில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜித். அதோடு, நேர்க்கொண்ட பார்வை படத்தில் ஆதிக்கும் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். அப்படித்தான ஆதிக் அஜித்துக்கு பழக்கமானார். தற்போது குட் பேட் அக்லி படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.


குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி: விடாமுயற்சி படம் முதலில் ரீலீஸ் என்பதால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். அனேகமாக ஏப்ரல் 10 அல்லது மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளன்று இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அஜித் ரசிகர்களை இப்படம் திருப்திப்படுத்தவில்லை.

டி.ஆர்.பாடிய பாட்டு: எனவே, அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு குட் பேட் அக்லி படத்தின் மீது திரும்பியிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் செம வைப்பான பாடல் ஒன்றை பாடியிருக்கிறாராம். டி.ஆர் பாடினாலே செம வைப்பாக இருக்கும். ஜிவி பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களை ஆட்டம்போட வைக்கும் என சொல்கிறார்கள்.

இப்போதுவரை இதை வெளியே சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. அனேகமாக ரிலீஸுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த பாடலை வெளியிடுவார்கள் என கணிக்கப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர்கள் மற்றும் அந்த படம் பற்றிய செய்திகளை பார்க்கும்போது கண்டிப்பாக இப்படம் சூப்பர் ஹிட் என்பது உறுதியாகியிருக்கிறது.

Next Story