தமிழ் சினிமா மொத்தமும் இங்கதான் இருக்கு போலயே!.. களைகட்டிய சுந்தர் சி-யின் பர்த்டே பார்ட்டி..!

by Ramya |
sundar c birthday
X

Director Sundar C: தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி. இவருடன் சினிமா துறைக்கு வந்த பல இயக்குனர்கள் தற்போது பீல்ட் அவுட்டாகி இருக்கும் நிலையில் இவர் மட்டும் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனராக ஜொலித்து வருகின்றார்.

முறைமாமன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சுந்தர் சி தொடர்ந்து ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். ரஜினி, கமல் தொடங்கி பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். கடந்த வருடம் இவர் இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அப்போது தமிழ் சினிமாவை காப்பாற்றிய திரைப்படம் என்றே கூறலாம். அதனை தொடர்ந்து இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு மதகஜராஜா திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் இயக்கப்பட்டது. விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, மனோபாலா, மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்தது.


ஆனால் அப்போது ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. பின்னர் பலகட்ட முயற்சிக்குப் பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மதகஜராஜா திரைப்படம் வெளியானது. ஆனால் படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றது. மொத்தம் 13 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது 50 கோடிக்கு மேல் வசூல் செய்து பொங்கல் வின்னராக மாறி இருக்கின்றது.


21ஆம் தேதி தனது 57 வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். இவரின் பிறந்த நாளுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். ஏற்கனவே படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் சுந்தர் சி தனது பிறந்த நாளை தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களை அழைத்து விமர்சையாக கொண்டாடி இருக்கின்றார்


அதன்படி நடிகர் விஷால், வடிவேலு, சூரி, யோகி பாபு, பிரசாந்த், விமல், ஆர் ஜே பாலாஜி, கே எஸ் ரவிக்குமார், மணிரத்தினம், வாசு என பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அதேபோல் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனா, ராதிகா, சங்கீதா, டிடி, வாணி போஜன், பிருந்தா மாஸ்டர் என பலரும் கலந்து கொண்டார்கள்.


நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த பார்ட்டியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சுந்தர்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் அனைத்தையும் நடிகை குஷ்பூ தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.


தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்துமே சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இங்கதான் இருக்கு போலயே என்று கூறி வருகிறார்கள்.




Next Story