மூஞ்சி சரியில்லப்பா!. 9 படங்களில் நடிகரை அசிங்கப்படுத்திய திரையுலகம்!.. அட அவரா?!

by Sankaran |   ( Updated:2025-02-07 12:09:55  )
tamil cinema
X

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. பல அவமானங்களை சந்திக்க வேண்டும். பல தடைகளைத் தாண்ட வேண்டும். பல சித்திரவதைகளை சகித்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் திறமை இருந்தாலும் அங்கும் போட்டி, பொறாமை, சிபாரிசுன்னு எல்லாம் இருக்கத்தான் செய்யும். உன்னைவிட திறமை குறைந்தவர்களுக்கு அவர்களது பணபலத்தின் காரணமாக முக்கிய இடத்தில் இருப்பார்கள்.

வைராக்கியம்: பல அவமானங்களை சந்திக்க வேண்டி உள்ளதே என்று பின்வாங்கி விடக்கூடாது. வைராக்கியமாக இருந்து தொழிலைக் கற்றுக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும். அப்படி வந்தவர்கள் ஏராளம் உண்டு. அதுல சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், அஜீத்குமார், விஜய்சேதுபதின்னு பலரையும் சொல்லலாம்.

சிவாஜியைக் குரங்கு மூஞ்சி மாதிரி இருக்காரு. இவரை ஏன் பராசக்தி கதாநாயகனா போடுறீங்கன்னு எள்ளி நகையாடியவர்களும் உண்டு. கருப்பாக இருந்த காரணத்தால் பல திறமையான கலைஞர்கள் சினிமாவுக்குள் நுழைய முடியாமலும் பலர் கஷ்டப்பட்டார்களாம். அதுல தப்பிச்சது ரஜினி, விஜயகாந்த், முரளி என ஒரு சிலர்தான்.

ரஜினிகாந்த், விஜயகாந்த்: ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் சினிமாவுக்கு வந்தபோது அதான் ஏற்கனவே ஒரு காந்த் இருக்காரே. அவரே போதும். இன்னொரு காந்த் எங்களுக்குத் தேவையில்லை என்றார்களாம்.

ஆனாலும் தன்னை அவமானப்படுத்தியவர்கள் முன் முன்னேறிக் காட்டணும் என்ற வைராக்கியம் விஜயகாந்திடம் இருந்தது. அதனால் தான் அவர் மிகப்பெரிய இடத்துக்கு வந்தார். இந்த அசிங்கம் தேவையான்னு நினைச்சா வாழ்க்கையில முன்னேற முடியாது என்பதையே இது காட்டுகிறது. அந்த வரிசையில் நடிகர் விஷ்ணுவிஷாலையும் சொல்லியே ஆக வேண்டும்.


விஷ்ணு விஷால்: இது யாருக்குமே தெரியாது. நான் முதல்ல பண்ண வேண்டிய படம் விஜய் ஆண்டனி சார் நடிச்ச நான் படம்தான். அந்த ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்காக உழைச்சேன். உடம்பைக் குறைச்சேன். ஆனா வேணாம்னு சொல்லிட்டாங்க. டிஷ்யூம் படத்துக்கும் பேசுனேன்.

சரின்னு சொன்னாங்க. அப்புறம் வேணாம்னு சொல்லிட்டாங்க. வாய்ப்பு தேடும்போது மூஞ்சி சரி இல்லன்னு சொல்லிட்டாங்க. இந்த மாதிரி 9 படங்கள் மிஸ் ஆகிருக்கு என்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் சிறந்த கிரிக்கெட் வீரர். வெண்ணிலா கபடி குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

Next Story