கேப்டன் கூட்டம் பாலாவுக்கு வந்துட்டு.. வயிற்றெரிச்சலில் இளம் ஹீரோக்கள்..
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் அறியமானார் பாலா. சாதாரண போட்டியாளராக அறிமுகமாகி தன்னுடைய அதீத திறமையால் போட்டியின் இறுதி வரை சென்றார். அது மட்டும் இல்லாமல் அந்த சீசனில் டைட்டில் வின்னரும் ஆனார். பிறகு விஜய் டிவியில் உள்ள அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் என்ட்ரி கொடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பாலா இல்லாத ரியாலிட்டி ஷோவே விஜய் டிவியில் கிடையாது என்ற நிலை வந்தது.
பாலாவிற்கு அவ்வப்போது படத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகளும் வந்தது. ஒரு காமெடியனாக விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் தன்னுடைய முதல் வெள்ளித்திரை பதிப்பை பதித்தார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து டிவி ஷோக்கள், யூடியூப் மற்றும் தொகுப்பாளர் என்று அடுத்தடுத்து பயணித்துக் கொண்டிருந்தார். அப்படி தன்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனக்கும் செலவழிக்காமல் மக்களுக்காக செலவழித்து வந்தார்.
மக்களுக்காக நான் செலவழிக்கும் பணம் உதவி கிடையாது அது என் கடமை என பாலா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இன்று நூற்றுக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வை மாற்றி உள்ளார் பாலா. இன்று தேடித் தேடி மக்களைச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் பாலாவிற்கு வெகுஜன மக்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைக்கப்பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இவரின் நல்ல உள்ளத்தை கண்ட தயாரிப்பாளர்கள் உதயகுமார் பாலாஜி மற்றும் ஜயி கிரண் இவரை வைத்து ”காந்தி கண்ணாடி” என்ற படத்தை எடுத்துள்ளார்.
எமோஷனல் ட்ராமாவாக வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாரும் சினிமா விமர்சகருமான சேகுவாரா கூறுகையில்,” இன்று கேபிஒய் பாலா செய்யும் உதவிகளை பார்த்து அவருக்கு ஒரு பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது. எப்படி விஜயகாந்துக்கு 80களில் ஒரு கூட்டம் இருந்ததோ அதேபோல்தான். கே பி ஒய் பாலாவிற்கும் ஒரு கூட்டம் உருவாகிவிட்டது. அதை நான் கண்கூடாக பார்த்தேன்”.
”காந்தி கண்ணாடி படத்தின் ப்பிரிவியூ ஷோவில் நான் அவரை பார்த்து ’ஒரு நடிகனா முன்னுக்கு வந்துடீங்க’ அப்படினு சொன்னேன். அதனால் அவருக்கென்று ஒரு பிராண்ட் உருவாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் கூடிய சீக்கிரமே விஜய் இடத்தை கேபிஒய் பாலா பிடிக்கலாம். ஏன் அதற்கு மேலே விஜயகாந்த் இடத்தையும் பிடிப்பார். அதை நான் உறுதியாக சொல்கிறேன்”. என்று கூறி இருக்கிறார்.
