தமிழ் ரசிகர்களுக்கு பெரிய ஆப்பை வச்சிட்டாங்களே… வெளியான அறிவிப்பால் அதிர்ச்சி!...

Cinema theatre: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று 24ந் தேதி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கீழே உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது .

பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும். அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களில் படம் 6 வாரங்கள் கழித்தும் ஓடிடியில் ஒளிபரப்பப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. திரையரங்குகளின் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதி தர வேண்டும்.

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், ஏசி திரையரங்குகளுக்கு நான் ஏசி திரையரங்குகள் தலா ரூ.250, ரூ.200, ரூ. 150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும். நம் பக்கத்து மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும்.

மால்களில் உள்ள திரையரங்குகளில் கமர்ஷியல் ஆக்டிவிட்டிக்கு அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கும் கமர்ஷியல் ஆக்டிவிட்டிக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகள் நஷ்டமின்றி நடத்த முடியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து தமிழக அரசு தரப்பில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது விரைவில் தெரிந்து விடும் எனவும் கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it