விஜய் கேட்டும் மறுத்த இயக்குனர்!.. அதுக்கு அப்புறம்தான் ஹெச்.வினோத்!.. தளபதி 69 உருவான கதை!...
Thalapthy 69: தமிழ் சினிமாவில் முக்கிய நடிராக இருப்பவர் விஜய். 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக அவர் உயர்ந்திருக்கிறார். இவரின் படங்கள் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்வதால் தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராகவே இருக்கிறார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் விஜய் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் விஜய். ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் விஜயை மிகவும் இளமையாக காட்டியிருந்தார்கள். இந்த படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் தயாரிப்பாளுக்கு லாபத்தை கொடுத்தது. இந்த படத்திற்கு பின் விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு ரீமேக்: துவக்கத்தில் இது அரசியல் ஆக்சன் கதை என சொல்லப்பட்டது. விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லவிருப்பதால் இந்த படம் வருகிற தேர்தலுக்கு அவருக்கு மைலேஜ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின்னர்தான், அது அரசியல் படம் அல்ல. தெலுங்கில் பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது.
பகவந்த் கேசரி பாலையா: ஒருகட்டத்தில் அது உண்மைதான் என உறுதியானது. ஃபாரஸ்ட் ஆபிசராக இருக்கும் பாலகிருஷ்ணா தன்னால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் பெண்ணை தனது மகள் போல வளர்ப்பார். அந்த பெண்ணுக்கு குத்துச்சண்டையில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியம் இருக்கும். அவருக்காகவே பாலையா வாழ்வார். அப்போது பழைய வில்லன் அவரின் வாழ்வில் மீண்டும் வருவான். அவனை எப்படி பாலையா பழிதீர்க்கிறார் என்பதுதன் படத்தின் கதை.
தெலுங்கு சினிமாவுக்கே உரிய பக்கா மசாலா அரைத்து இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிப்புடி இயக்கியிருந்தார். இந்த படத்தை 5 முறை பார்த்த விஜய் அனில் ரவிப்புடியை அழைத்து இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நான் நடிக்க விரும்புகிறேன். நீங்களே இயக்குங்கள் என சொல்ல அவரோ ‘நான் ரீமேக் செய்ய மாட்டான்’ என சொல்லி மறுத்துவிட்டாராம்.
அதன்பின்னரே, ஹெச்.வினோத்தை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். பகவந்த் கேசரி படத்தில் ஸ்ரீலீலா நடித்த வேடத்தில் தமிழில் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்து வருகிறார். அதேபோல், தெலுங்கில் காஜல் அகர்வால் செய்த வேடத்தை தமிழில் பூஜா ஹேக்டே செய்யவிருக்கிறார்.
விஜய் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விரும்புவது இது முதன்முறையில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த கில்லி, பத்ரி, யூத், பிரியமுடன், போக்கிரி போன்ற படங்கள் எல்லாமே தெலுங்கில் ஹிட் அடித்த படங்கள்தான். அதை ரசிகர்கள் கிண்டலடித்த பின்னரே விஜய் தெலுங்கில் ரீமேக்கில் நடிப்பதை நிறுத்தினார். ஆனால், அவரின் கடைசி திரைப்படம் ஒரு தெலுங்கு பட ரீமேக்காகவே அமைந்துவிட்டது.