கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மூலம் மாஸ் ஹிட் கொடுத்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக களமிறங்கி விட்டார். அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படத்தை ஹிட் கொடுக்க தீவிர வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த படம் தலைவர்169 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆதாலால், இந்த படம் வெற்றிபெற கடுமையாக உழைத்து வருகிறார்.
இதையும் படியுங்களேன் – ஒரு கோடி கொடுத்தா ஓகே.! வீம்பு பண்ணும் அண்ணாச்சி.! எல்லாம் அந்த வீடியோ தான் காரணமாம்.!
இந்த படத்திற்கான திரைக்கதை மேம்படுத்த்தும் பணியில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஈடுபட்டுள்ளாராம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் என மூன்று முக்கிய டாப் நடிகைகள் நடிக்க உள்ளனராம்.
மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இதில் முக்கிய வில்லனாக நடிக்க உள்ளாராம். இந்த தகவல்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…