உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு... பட்டுவேட்டி சட்டையில் விஜய்... கலக்கலான தளபதி69 பூஜை போட்டோஸ்...!

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் விஜய். அது மட்டுமில்லாமல் தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பதும் நடிகர் விஜய் தான். தொடர்ந்து படங்களில் மிக பிஸியாக நடித்து வந்த இவர் தற்போது சினிமாவுக்கு பாய் சொல்லிவிட்டு அரசியலில் குதித்து விட்டார்.

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய் அதை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து தற்போது கட்சியின் கொடி, பாடல் போன்றவற்றை சமீபத்தில் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இப்படி அரசியலில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் தனது திரை பயணத்தை அடுத்த திரைப்படத்துடன் முடிக்க இருக்கின்றார். அதாவது இவர் தளபதி 69 என்ற திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கின்றார். இந்த படத்துடன் தனது திரைப்பயணத்தை முடிக்க உள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் நாட்டிற்கு ஒரு நல்ல தலைவர் கிடைக்கப் போகின்றார் என்கின்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தளபதி 69 திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை ஹச் வினோத் இயக்குகின்றார். அனிருத் இசையமைக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படம் தளபதி 69 ஆகும். மேலும் இப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


கடந்த மூன்று நாட்களாக படத்தின் காஸ்டிங் தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அதன்படி இந்த திரைப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மம்தா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.


இந்த பூஜையில் நடிகர் விஜயுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மம்தாபைஜு, நரேன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நடிகர் விஜய் பட்டு வேட்டி சட்டையில் கலக்கலாக வந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தையும் கே வி என் நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புன்னகை தான் அவருக்கு அழகு என்று விஜயை வர்ணித்து வருகிறார்கள்.




ramya
ramya  
Related Articles
Next Story
Share it