இப்படி பிரிச்சி மேஞ்சா எப்டி? தளபதி69 CastRevealக்கு செக் வைத்த ரசிகர்கள்..
Thalapathy69: விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாக இருக்கும் தளபதி 69 படத்தின் படக்குழு குறித்த தகவல்கள் இன்று மாலையில் இருந்து வெளியிடப்படும் என தயாரிப்புக் குழு தெரிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் செய்திருக்கும் விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் இந்த வருட தொடக்கத்தில் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்தார். அந்த அறிக்கையிலேயே நான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் அவருடைய கோட் திரைப்படம் முடிந்துவிட்டது. தற்போது அவரின் கடைசி திரைப்படமான தளபதி 69 உருவாக இருக்கிறது. இந்த வாரத்தில் இப்படத்தின் பூஜை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து படத்தின் சூட்டிங் தொடங்கி நடக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணி முதல் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான கே வி என் அறிவித்திருந்தது. அது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரபலங்களின் நிழற்படங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது ரசிகர்கள் அந்த நிழற்படங்களை ஸ்கிரீன்ஷாட்களாக எடுத்து அந்த பிரபலங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி நடிகை மமீதா பைஜு, பூஜா ஹெக்டே, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி தியோல் என ரசிகர்கள் வரிசையாக வெளியிட்டு வருகின்றனர்.
கேவிஎன் நிறுவனம் முதல் அறிவிப்பிலிருந்து தொடர்ச்சியாக வீடியோக்கள் மூலம் வெளியீடும் பதிவு வைரல் ஆகி வரும் நிலையில், ரசிகர்களின் இந்த கண்டுபிடிப்பு சரியாக இருக்குமா? என்பதை இன்று மாலை 5 மணி முதல் தெரிந்துவிடும் எனவும் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.