வருஷ இறுதியில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. சூப்பர் அப்டேட்டால இருக்கு

by Rohini |
vijay
X

vijay


விஜய் தற்போது அவருடைய 69 ஆவது படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் பாபி தியோல் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

இன்னொரு புறம் விஜய் அவருடைய அரசியல் பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட பெங்கால் புயலால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவியை வழங்கினார் .அதுவும் பெரும் பேசு பொருளாக மாறியது. அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படமான 69 வது திரைப்படம் தான் கடைசி படமாக இருக்கும் என தெரிகிறது.

அதன் பிறகு முழுமூச்சாக அரசியலில் களம் இறங்கப் போகிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக எதிர் கொள்ள இருக்கிறார் விஜய். அதற்கான முன்னேற்பாடுகளாக தன்னுடைய தொண்டர்களையும் இயக்கத்தையும் வைத்து மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறார் .இந்த நிலையில் தளபதி 69 படத்தை பற்றிய அப்டேட் ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

மீபத்தில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது .தளபதி 69 ஆவது படத்தின் டைட்டில் இந்த மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என கோடம்பாக்கத்தில் சொல்லப்படுகிறது. அது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அரசியலில் முழுமூச்சாக இறங்க இருப்பதால் ஒருவேளை அவர் நடித்துக் கொண்டிருக்கும் இந்த 69 ஆவது திரைப்படம் ஒரு அரசியல் சார்ந்த படமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதற்கு ஏற்ப தலைப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற வகையிலும் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது. அதை போல் தளபதி 69 படமும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது.

Next Story