தளபதி69ல் சிகப்பு சேலையா?... சூப்பர்ஸ்டார் நாயகியை களமிறக்க படக்குழு முடிவு

Thalapathy69: விஜயின் கேரியரில் கடைசி படமாக உருவாக இருக்கும் தளபதி69 படத்தில் இணைய இருக்கும் பிரபலம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கமர்ஷியல் சக்ஸஸ் மட்டும் தான் வசூல் வேட்டை நடத்தவே இல்லை.

இந்நிலையில் இப்படத்தினை முடித்த கையோடு விஜய் தன்னுடைய 69வது படத்தில் இணைய இருக்கிறார். அரசியல் கட்சியை தொடங்க இருக்கும் விஜய் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவும் இருக்கிறார். இதனால் கடைசி திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் விஜயிற்கு ஜோடியா பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். வில்லன் வேடத்தில் பாபி தியோல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகள் சேலைகளில் ஆடும் சிங்கிள் பாடல்கள் பெரிய அளவில் வைரல் ஹிட்டாகி வருகிறது. அந்த வகையில் விஜயின் கோட் படத்தில் மட்ட பாடலில் திரிஷா மஞ்சள் சேலையில் அசரடித்தார். அதுபோல, வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியரின் சிகப்பு சேலை ஹிட்டடித்துள்ளது.

கடந்தாண்டு அஜித்துடன் இணைந்த மலையாள உலகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் இந்தாண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இருக்கிறார். தற்போது தளபதி என்பதால் மஞ்சு வாரியரின் புகழ் கோலிவுட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it