சொன்னா எங்க கேக்குறாங்க.. நீங்க சொன்னதுதான்… தளபதி69 நாயகி இவரே!… அடுத்த அப்டேட்
Thalapathy69: விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாக இருக்கும் தளபதி 69 திரைப்படத்தின் அடுத்த பிரபலம் குறித்த அறிவிப்பை கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய 69 ஆவது திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். இதை தொடர்ந்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது.
கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை ஹெச் வினோத் இயக்க இருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். நடிகர் விஜயின் எண்ட்ரி மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முதல் படத்துக்கு குறித்த விபரம் தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று படத்தின் முதல் பிரபலமாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே அனிமல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பாபி தியோல் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் விஜயுடன் நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்க வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக தற்போது இப்படத்தில் அடுத்த பிரபலமாக நடிகை பூஜா ஹெக்டே அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே இவர் விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. அதுபோல நடிகை பூஜா ஹெக்டே இதுவரை தமிழில் நடித்த எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் விஜயின் கடைசி திரைப்படமான தளபதி 69 இல் அவர் இணைந்து இருப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது என்பதுதான் உண்மை.