வீடு வரைக்கும் போனவரு இத பண்ணலயே.. ஐசரி இல்லத் திருமணத்திற்கு சிம்பு வராததன் பின்னணி

simbu
ஒருத்தர் மேல கோபம் இருந்தா அதை எப்பொழுதுமே மண்டைக்கு ஏத்தாத ஒரு மனிதர்னா அது சிம்பு தான். ஏனெனில் பெரும்பாலும் அந்த வயதுக்காரர்களுக்கு அது அமையவே அமையாது அந்த குணம். ஏனெனில் அதற்கு பல உதாரணங்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் தான் நான் இதை நிச்சயமாக அடிச்சு சொல்கிறேன் அப்படிப்பட்ட சிம்பு ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு போகவில்லையே என நாம பேசினோம்.
அப்போ அந்த கோபத்தை மண்டையில வச்சிருக்காருன்னு தானே அர்த்தம் என நமக்கு நினைக்க தோன்றியது. ஆனால் அதைப் பற்றி விசாரிக்கும் பொழுது ஐசரி கணேஷ் டி ராஜேந்திரனுக்கு அழைப்பிதழ் வைத்திருக்கிறார். அதுவும் நேரில் போய் வைத்திருக்கிறார். வைத்துவிட்டு வாங்க என்றெல்லாம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். ஆனால் சிம்புவுக்கு ஒரு போன் செய்து நீங்க வாங்க என சொல்லுவாருன்னு சிம்பு எதிர்பார்த்து இருக்கிறார் போல.
ஏனெனில் ஐசரி கணேஷ் போன நேரம் சிம்பு இல்லை. இல்லை என்றால் பெரும்பாலும் எல்லோரும் செய்வது என்னவெனில் அது வீட்டில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கு போன் செய்து போன் மூலமாக அழைப்பு விடுப்பார்கள். ஆனால் ஐசரி கணேஷ் அதை செய்யவில்லை. அவர் கிளம்பி போய் விட்டாராம் .இதில் சிம்புவுக்கு செல்போனே கிடையாது என்று சொல்லும் பட்சத்திலும் அவரை பட சம்பந்தமாக தொடர்பு கொள்வதற்கு என ஏதாவது ஒரு தகவல் தொடர்பு இருக்க தானே செய்யும்.
அதனால் சிம்பு முதல் நாள் சாயங்காலம் வரைக்கும் காத்திருந்தாராம். எப்படியும் ஐசரி கணேஷ் போன் செய்வார் என்று காத்திருந்தாராம். அதனால் காலையில் போவோம் என நினைத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் அங்கிருந்து அழைப்பே வரவில்லையாம். அந்த வருத்தத்தினால் தான் சிம்பு போகவில்லை என இப்போது தெரிகிறது .இதற்கிடையில் சிம்பு எல்லாவற்றையும் மன்னிக்க கூடிய நபர்.
isari
அதனால் இதையும் மன்னித்து விட்டு போயிருக்கலாமே என்று தான் நமக்கு தோன்றுகிறது. எல்லாவற்றையும் தாண்டி ஈகோ என்ற ஒரு விஷயம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அதே நேரம் சிம்பு ஒரு விஷயத்தை யோசித்து இருக்கலாம். ஐசரி கணேஷ் வீட்டு திருமணம் என்பது ஒருநாள் வைபவம் கிடையாது. கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் நடந்தது. அதில் ஐசரி கணேஷ் பிஸியாக இருந்ததினால் சிம்புவை அழைக்க மறந்திருக்கலாம். ஆனால் சிம்பு இந்த கல்யாணத்திற்கு போயிருந்தால் ஐசரி கணேஷ் சிம்பு இவர்களுக்கு இடையேயான பிரச்சனையும் தீர்ந்து நிறுத்தப்பட்ட ப்ராஜெக்ட்டும் ஆரம்பமாய் இருக்கும் என இன்று வலை பேச்சில் அந்தணன் கூறுகிறார்.