இப்படி ஒரு தப்பு செஞ்சு ஜெயிலுக்கு போனவரா? ‘மூக்குத்தி அம்மன் 2’ வில்லன் குறித்த பின்னணி

சினிமாவின் குட்டி பாலையா என்றே சொல்லலாம் துனியா விஜய். கனடாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். பஞ்ச் வசனம் பேசி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் பாலையா. ஆனால் எனக்கு பஞ்ச் எல்லாம் தெரியாது. ஆக்சன் மட்டும்தான் என கன்னட சினிமாவின் ஜூனியர் பாலையாவாகவே மாறி இருப்பவர் துனியா விஜய். இவர்தான் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் வில்லன். இவர் திரையில் மட்டும் சாகசம் செய்கிறவர் கிடையாது. நிஜத்திலும் பல சாகசங்கள் செய்திருக்கிறார்.
ஜிம் மாஸ்டரையே அடிச்சு தூக்கி போட்டு ஜெயிலுக்கு போனவர் துனியா விஜய். அந்த அளவுக்கு இவர் மீது பல புகார்கள் இருக்கின்றன. கனடாவில் சுதிப் ஹீரோவாக நடித்த ஒரு படத்தில் அடியாளாக இருந்தவர் தான் இந்த துனியா விஜய். அப்பொழுது இவர் பெயர் வெறும் விஜயகுமார் என்று தான் இருந்தது. இவர் அறிமுகமான அந்த கன்னட படமான ரெங்கா எஸ் எஸ் எல் சி படத்தில் திரைக்கதையில் வேலை பார்த்த ஒருவர் நான் ஒரு தனியாக படம் பண்ணுகிறேன். அதில் நீ ஹீரோவாக பண்ணு என கூட்டிட்டு போய் நடிக்க வைத்த படம்தான் துனியா.
அந்த படத்தின் பெயரையும் சேர்த்துக்கொண்டு தன்னுடைய பெயரை துனியா விஜய் என மாற்றிக் கொண்டார். அந்த படம் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட். அதனைத் தொடர்ந்து அவருடைய நடிப்பில் இன்னும் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அதில் சில படங்கள் பிளாப். ஆனாலும் ஒரு சில படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தன. இதைத்தொடர்ந்து அவர் மீது பல சர்ச்சைகளும் வர ஆரம்பித்தன. ஒரு படத்தின் படப்பிடிப்பில் ஹெலிகாப்டரில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் துனியா விஜய் தண்ணீரில் குதிக்க வேண்டும்.
அப்படி குதிக்கும் பொழுது படக்குழுவினர் துனியா விஜயை மட்டும் மீட்டெடுத்து வருகின்றனர். மத்த இரண்டு ஸ்டாண்ட் மாஸ்டர்களையும் உங்களுக்குத்தான் நீச்சல் தெரியுமே அப்படியே நீந்தி வாருங்கள் என விட்டுவிட்டார்களாம். அதில் துனியா விஜய் மட்டும்தான் காப்பாற்றப்பட்டார். அந்த இரண்டு ஸ்டாண்ட் மாஸ்டர்களும் நீரில் மூழ்கி இறந்து போனார்கள். இது பெரிய போலீஸ் கேஸ் ஆக படக்குழுவினர், துனியா விஜய் என இவர்கள் மீது கேஸ் ஃபைலாக துனியா விஜய்க்கு நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜிம் மாஸ்டருடன் இவருக்கு மோதல் ஏற்பட அவருடைய உறவினர் ஒருவரை துனியா விஜய் கடத்திக்கொண்டு போய்விட்டாராம்.
அதுவும் போலீஸ் கேஸ் ஆகி மீண்டும் அவரை காவல்துறையினர் கைது செய்தார்கள். அதன் பிறகு நாமே ஒரு படத்தை டைரக்டர் செய்வோம் என ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அதில் அவரும் நடிக்க இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. இதைத்தொடர்ந்து நாமே இனிமேல் படத்தை டைரக்ட் பண்ணுவோம் என்ற முடிவுக்கு வர இந்த விஷயம் தெலுங்கு சினிமா உலகிற்கு தெரிய வர தெலுங்கு சினிமாவில் இருந்து இவருக்கு அழைப்பு வந்தது.
இங்கு ஒரு படத்தை இயக்க வேண்டும் என இவரை அழைத்து இருக்கின்றனர் .அவரை அழைத்ததே பாலகிருஷ்ணாதான். வீரசிம்மா ரெட்டியில் வில்லனாக நடிக்க அவரை அழைத்து இருக்கின்றனர். கன்னட சினிமாவில் துனியா விஜய்க்கு என ஒரு மார்க்கெட் இருக்கிறது. அது மாஸ் மார்க்கெட் என்றே சொல்லலாம். இந்த துனியா விஜயின் படங்கள் தமிழில் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்றால் அது சந்தேகம்தான் .இப்படி மாஸ் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கும் துனியா விஜய் தான் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் வில்லனாக நடிக்க போகிறார். இந்த படம் எப்படி வரப்போகுது என பொறுத்திருந்து பார்ப்போம்.