தலீவர் ஒரு சுயநலவாதி.. அமீர்கானை ஏமாற்றி தன் படத்தை ஹிட் ஆக்கணுமா? பிரபலம் விளாசல்..
தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்தது கூலி திரைப்படம். இந்த வருடம் தொடங்கி எட்டு மாதம் ஆன நிலையில் இதுவரை தமிழ் சினிமாவை எந்த படமும் தூக்கி நிறுத்தவில்லை. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த தக் லைப் திரைப்படமும் தோல்வி அடைந்தது. முன்னணி ஹீரோக்களின் எந்த படமும் பேர் சொல்லும் அளவுக்கு வெற்றி பெறவில்லை.
அப்படி இருக்கும் பட்சத்தில் அஜித்தின் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. மேலும் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று அனைவருக்கும் இந்த படம் நல்ல லாபத்தை கொடுத்தது. அதனைத் தவிர வேறு எந்த படங்களும் பெரிய வசூலை தரவில்லை என்று திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த நிலைமையை சரி செய்யும் விதமாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி, உபேந்திரா, நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான ’கூலி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். அவரின் இசையில் பாடல்கள் எல்லா மக்களிடம் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தது.
அதேபோல படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்து இந்த படத்திற்கு அடி மேல் அடி விழுந்தது. இருந்த போதிலும் இந்த படம் நான்கு நாட்களில் 400 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிச்சு தப்பு பண்ணிட்டேன் என்று மனம் வருந்தி உள்ளார் அமீர்கான். ”நான் கூலி படத்தில் நடித்து தப்பு பண்ணிட்டேன். இந்த படத்தில் என் கதாபாத்திரம் என்னனு எனக்கே தெரியவில்லை. இனி வருங்காலத்தில் இந்த மாதிரி படம் பண்ண மாட்டேன்” என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பங்கிற்கு வசமாக செய்துள்ளார் அதில்,” தலீவர் ஒரு சுயநலவாதி. தன் படங்கள் பான் இண்டியா ஹிட்டாக மற்ற மாநில பிரபலங்களை டம்மி ரோடில் நடிக்க வைத்து ஹைப் ஏற்றுவார். ஆனால் இவர் மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க மாட்டார். ரஜினி சாருக்காக கதை கேட்காமல் நடித்த அமீர்கான் இப்போது புலம்புகிறார்.
இதை மற்ற பிரபலங்களும் உணர வேண்டும். உங்கள் படங்களில் நாங்கள் நடித்தால் எங்கள் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும். நாங்கள் வாங்கிய அதே சம்பளம் நீங்கள் வாங்க வேண்டும் என கண்டிஷன் போடுங்கள் தலீவர் தலை தெரிக்க ஓடிவிடுவார்”. என்று பங்கமாக கலாய்த்து தள்ளிவிட்டார்.
