LCUவா? VCUவா?1000 கோடி வசூலை தட்டித்தூக்கப் போவது யாரு?

by ROHINI |
lokesh
X

lokesh

தற்போது தமிழ் சினிமாவில் எண்ணற்ற பல இளம் இயக்குனர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். நாளைய இயக்குனர்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தி எத்தனையோ இயக்குனர்கள் இன்று கோலிவுட்டில் ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள். கார்த்திக் சுப்பாராஜ் நித்திலன் ஸ்ரீ கணேஷ் என இவர்கள் எல்லாருமே நாளைய இயக்குனர்களில் பங்கு கொண்டு இயக்குனர்களாக மாறியவர்கள்.

90கள் காலகட்டத்தில் கே எஸ் ரவிக்குமார், ஆர் வி உதயகுமார் என ஒரு சில இயக்குனர்கள் தான் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் இன்று இளம் இயக்குனர்கள் நிறைய பேர் பல நல்ல படைப்புகளை கொடுத்து தமிழ் சினிமாவின் வளர்ச்சியை பெருக்கிக் கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவை தவிர மற்ற மொழி சினிமாக்கள் வசூலில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக கன்னட மொழி சினிமா வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறது.

அதற்கு உதாரணமாக அமைந்தது கேஜிஎப் காந்தாரா போன்ற திரைப்படங்கள். அதேபோல பாலிவுட் ஆயிரம் கோடி வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கியது. அதுவும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படம். யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றி. இங்கிருந்து சென்று பாதாள குழியில் கிடந்த பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பெருமை அட்லியையே சேரும்.

அப்படி தமிழ் சினிமாவையும் ஆயிரம் கோடி வசூலை நோக்கி கொண்டு செல்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் .குறிப்பாக அந்த எதிர்பார்ப்பு லோகேஷ் மீதும் வெற்றிமாறன் மீதும் திரும்பி இருக்கிறது .லோகேஷ் யுனிவர்ஸ் மூலம் இந்த ஒரு எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகுமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் இப்போது ஒரு படம் உருவாக இருக்கிறது .அது வடசென்னை படத்தின் சாயலை ஒத்து இருக்கும் என்பதால் வடசென்னை படத்தில் இருக்கும் சில கேரக்டர்கள் சிம்பு படத்தில் வருகிறார்கள் என கூறப்படுகிறது.

இதைப்பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அனைவருடைய எதிர்பார்ப்பு லோகேஷ் யுனிவர்ஸ் மூலம் ஆயிரம் கோடி வசூலை அடைய முடியுமா என்பது தான் .ஆனால் வெற்றிமாறன் யுனிவர்ஸ் மூலமும் இதை அடைய வேண்டும் என ஆசைப்படுகிறோம் என்று அந்த பதிவில் பதிவிட்டு வருகின்றனர். அது சிம்பு மற்றும் தனுஷ் இவர்கள் இணைந்தால் கண்டிப்பாக நடக்கும் என்றும் கூறி வருகிறார்கள் .

மங்காத்தா படத்தில் அஜித்திடம் இருந்து அர்ஜுனுக்கு ஒரு போன் கால் போகும். என்ன ஆக்சன் கிங் என அஜித் கூற அந்தப் பக்கம் அர்ஜுன் சிரிப்பை பதிலாக தர கூடவே அஜித்தும் சேர்ந்து சிரிப்பார் .இதை அப்படியே சிம்பு தனுஷை வைத்து ரீ கிரியேட் செய்து இப்படி ஒரு காம்போ எப்போது எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Next Story