கவுண்டமணியை அறைக்குள் வைத்து பூட்டிய இயக்குனர்... இது எப்போ நடந்துச்சுன்னு தெரியுமா?

by Murugan |   ( Updated:2024-10-20 16:30:44  )
goundamani
X

ஸ்கிரிப்டைத் தாண்டி ஒரு விஷயம் கூட போகக்கூடாதுன்னு நினைப்பாராம் இயக்குனர் எம்.பாஸ்கர். அது உண்மையான்னு அவரது மகனும் பிரபல தயாரிப்பாளருமான பாலாஜி பிரபுவிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

அது உண்மைதான். அதற்கு ஒரு சுவாரசியமான சம்பவம் சொல்லணும். பக்கத்து வீட்டு ரோஜா படததை பைரவி படத் தயாரிப்பாளருக்காக இயக்கினார். படத்தின் தயாரிப்பாளர் கலைஞானம். கார்த்திக், ராதா, கவுண்டமணி, மனோரமா நடிச்ச படம்.

அதுல கவுண்டமணி சார் ஒரு டயலாக் சொல்லிட்டு அவருக்கே உரிய சிரிப்பை சிரித்தார். அதைப் பார்த்ததும் அப்பா 'அதென்ன சிரிப்பு. அதை எல்லாம் செய்யக்கூடாது'ன்னுட்டாரு. 'இல்ல அந்த சீனை டெவலப் பண்ணலாம்னு சிரிச்சேன்'னாரு. 'இல்ல நீங்க ஒண்ணும் பண்ணாதீங்க. அப்புறம் எடிட்டிங்ல தூக்கிடுவன். எனக்கு பேப்பர்ல என்னை இருக்கோ அதுதான் வரணும்'னு சொன்னாரு.


'அதனால தேவையில்லாம பேசாதீங்க'ன்னாரு. 'இல்ல சார் அந்த சீனுக்காக அப்படி டெவலப்மெண்ட் தான் காமெடில பண்ணினேன்'னாரு. 'நீங்க ஒண்ணும் டெவலப் பண்ணவேண்டாம். பிலிமை லேப்புக்கு அனுப்பிச்சா அவங்க டெவலப் பண்ணிக்குவாங்க. நீங்க ஒண்ணும் பண்ணவேண்டாம்'னுட்டாரு.

அதுல கவுண்டமணிக்குக் கொஞ்சம் வருத்தம்தான்னு கேள்விப்பட்டேன். அதே போல சக்கரவர்த்தி படத்துக்காக கவுண்டமணியை அப்பா நடிக்க வைத்தார். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்து கொண்டு இருந்தது. அப்போது கவுண்டமணி பீக்கில் இருந்தார். அப்போது தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக வந்து அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தனர்.

அது அப்பாவுக்கு எரிச்சல் ஊட்டியது. டப்பிங் பணிகள் பாதித்தது. அதனால் டப்பிங் அறையை வெளியில் வந்து பூட்டிவிட்டு உள்ளே சென்றார். கவுண்டமணி 'ரொம்ப நேரமாக அட்வான்ஸ் கொடுக்க யாரையுமே காணோமே மார்க்கெட் போயிடுச்சா?'ன்னு தனது மேனேஜரிடம் கேட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த அப்பா 'மார்க்கெட் எல்லாம் போகல. இன்னும் நீங்க தான் உச்சத்துல இருக்கீங்க. வெளியில கதவைப் பூட்டு போட்டு பூட்டி வச்சிருக்கேன்'னு சொன்னார். 'எனக்கு டப்பிங் பணிகள் பாதிக்குது. அதனால தான் அப்படி செஞ்சேன்'னு சொன்னதும் 'என்ன சார் இதெல்லாம் அநியாயமா இருக்கு'ன்னு சிரித்துக்கொண்டே கேட்டாராம் கவுண்டமணி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story