சிவாஜியைக் குதிரை மூஞ்சின்னு கேலி செய்த இயக்குனர்... அவர்மீது காண்டான இசை அமைப்பாளர்
நடிகர் சிவாஜியை வைத்து பல வெற்றிப்படங்களையும், எம்ஜிஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் என்ற பிரமாண்ட படத்தையும் தயாரித்து இயக்கியவர் பி.ஆர்.பந்துலு. அவர் தயாரித்த முதல் படம்னா அது கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. அந்தப் படத்தை இயக்கியவர் ப.நீலகண்டன். இவர் பி.ஆர்.பந்துலுவின் நண்பர்தான்.
குதிரை மூஞ்சி: பராசக்தி படத்தில் சிவாஜி நடித்த 2000 அடி காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்தக் குதிரை மூஞ்சி நடிகர் தமிழ்சினிமாவுக்கு ஒத்து வருவாரா என்று கிண்டல் செய்தவர்தான் ப.நீலகண்டன். அப்படிப்பட்ட ப.நீலகண்டனுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர் சிவாஜி. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்துக்கு இசை அமைத்தவர் டி.ஜி.லிங்கப்பா.
அவர் மிகப்பெரிய ஞானஸ்தர். அவரைப் பொருத்தவரைக்கும் அவர் டியூன் போட்ட உடனே பி.ஆர்.பந்துலுவுக்கு வாசித்துக் காட்டுவார். அவர் 'டியூன் எல்லாம் அற்புதமா இருக்கு'ன்னு பாராட்டுவார்.
பனிப்போர்: 'எங்கிட்ட போட்டுக் காட்டாதீங்க. எல்லாமே அவருக்கிட்ட போட்டுக் காட்டுங்க. அவர்தான் படத்தோட டைரக்டர்'னு சொல்லி விட்டார். ப.நீலகண்டனுக்கும், லிங்கப்பாவுக்கும் ஏற்கனவே பனிப்போர் உண்டு. இவர் டியூன் போட்டுக் காட்டுன உடனே ஆபீஸ் பாய், மேனேஜர், காபி கொண்டு வர்ற பையன், கார் டிரைவர்னு எல்லாருக்கும் அதைப் போட்டுக் காட்டுவார்.
ப.நீலகண்டன் Vs லிங்கப்பா: அது அவர்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே 'ஓகே' பண்ணுவார். இந்தப் போக்கு லிங்கப்பாவுக்கு வருத்தத்தை உண்டு பண்ணியது. ஏன்னா அவர் மிகப்பெரிய ஞானஸ்தன். தன்னுடைய பாட்டை எடை போட இவங்களை எல்லாம் கூப்பிடுறாரேன்னு ஒரு வருத்தம் இருந்தது. ஆனா இதை எல்லாம் மீறி அவருடன் இணைந்து பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் லிங்கப்பா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி: 1954ல் சிவாஜி நடித்த படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு தயாரிக்க ப.நீலகண்டன் இயக்கினார். படத்திற்கு இசை அமைத்தவர் டிஜி.லிங்கப்பா என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.