இளையராஜாவுக்கு இயக்குனர் கொடுத்த சவால்... ஆனா அதுவே ரிப்பீட் ஆகிடுச்சே!

by Sankaran |   ( Updated:2025-02-05 16:01:09  )
ilaiyaraja
X

திருக்குறள் படத்தின் டைரக்டர் பாலகிருஷ்ணன் இளையராஜா குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

திருக்குறள்: காமராஜர், எம்ஜிஆர், காந்தி எடுத்து இப்போ திருக்குறள் படத்தையும் எடுத்து திருவள்ளுவர் வரைக்கும் வந்துருக்கீங்க? அதுபற்றி சொல்லுங்கன்னு ஆங்கர் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். படப்பிடிப்பு முடிந்தது. பாடல் காட்சியும் முடிந்தது. முதல் பாடலை முதல்வர் வெளியிட்டாங்க. டிஐ மட்டும்தான் பாக்கி. இது திருக்குறள் பற்றிய படம். அதைச் சொல்வதற்காக வள்ளுவரையும், வாசுகியையும் கொண்டு வந்துருக்கேன்.


குறளுக்கு உரை: வள்ளுவர் என்ன ஜாதி, என்ன மதம்னு நாங்க கண்டுகொள்ளல. ஒரு காலகட்டத்துல அவருடைய குறளுக்கு உரை எழுதியவர்களே பல்வேறு யூகங்களுக்கும் வழிவகுத்தாங்க. அவர் கன்னியாகுமரியில் பிறந்துருப்பாருங்கறதுக்கான விஷயங்கள் கிடைச்சிருக்கு. கலைஞரே கன்னியாகுமரியில தான் சிலை வச்சிருக்காரு.

அங்கு வள்ளுவநாடு இருக்கு. இன்னைக்கும் அவர் சொன்ன உவமைகள் கேரளாவில இருக்கக்கூடிய கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கிற மாதிரி இருக்கு. திருக்குறளைப் பற்றி மணிக்கணக்கில பேசலாம். அது அவ்வளவு அபூர்வமான படைப்பு. நான் எத்தனை படம் எடுத்தாலும் இளையராஜாகிட்டத்தான் இசைக்கு போவேன்.

2000 வருஷத்துக்கு முன்பு: 2000 ஆண்டுகளுக்கு முன்புன்னு படத்தோட டைட்டில்லயே சொல்லிட்டோம். அதுதான் நாங்க அவருக்குப் போடுற கட்டுப்பாடா இருந்தது. வேற வழியில்ல. 2000 வருஷத்துக்கு முன்புன்னு சொல்லும்போது அதுக்குள்ள இசைக்கருவிகளைத் தான் அவரு வாசிக்க முடியும். அதுல அவரு ரொம்ப கவனமா இருந்தாரு. ஒவ்வொரு நாளும் ஆர்கெஸ்ட்ராகிட்ட சொல்வாராம்.

முல்லை வாசன் பாட்டு: 2000 வருஷத்துக்கு முன்னாடி உள்ள சமாச்சாரம்னு. இசையைப் பொருத்தவரைக்கும் அவர்கிட்டா நாம எதுவுமே குறுக்கிட முடியாது. ஏன்னா அதை எல்லாம் தாண்டியவரு அவரு. முல்லை வாசன் பாட்டு மட்டும் ரெக்கார்டு பண்ணிருந்தாங்க. ரஞ்சனி பாடிருந்தாங்க. இன்னும் கொஞ்சம் ஃபீல் இருக்கலாம்னு எனக்குப் பட்டது. அதை நான் சொன்னேன். அதுக்கு ஏற்ப பாடுனாங்க.

அவருடைய பின்னணி இசைக்கு நாம படமாக்குறது பெரிய சேலஞ்ச். அது சாதாரண வேலை அல்ல. பெரிய சவால். நாலரை நிமிஷம் பாட்டு. அவரு 10 நிமிஷத்துல டியூன் போட்டுட்டாரு. ஒருநாள்ல ரெக்கார்டு பண்ணிட்டாரு. அதைப் படமாக்குறதுக்கு நான் ஒரு வாரம் தூங்கல. மூளையில ஓடுது.

4 வகையான லொகேஷன்கள்: இன்னென்ன ஷாட் வைக்கணும்னு. வாசுகி, அவரது தோழி, அவரது அம்மா, வள்ளுவர், அவரது தகப்பனார், வேதியர்கள் என இவ்ளோ பேரும் அதுக்குள்ள வர வேண்டி இருக்கு. நாலு வகையான லொகேஷன்கள். அவரு தன்னை அறியாமலேயே அப்படி ஒரு சேலஞ்சை உருவாக்கிக் கொடுத்துடறாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story