1. Home
  2. Cinema News

சுடர்விட்டு எரிய வருகிறான் காளமாடன்.. பைசன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..

சுடர்விட்டு எரிய வருகிறான் காளமாடன்.. பைசன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். தன்னுடைய வலுவான கதையில் அழுத்தமான கதாபாத்திரங்களை வடிவமைத்து ரசிகர்களை என்டர்டைன் செய்து வருகிறார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான ”பரியேறும் பெருமாள்” விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து இவர் இயக்கிய ”கர்ணன்” திரைப்படம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அதுவும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு இவர் எடுத்த ”மாமன்னன்” திரைப்படம் உதயநிதி மற்றும் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுக்கு ஸ்டராங் கம்பேக்காக மாரி செல்வராஜ் அந்த படத்தை கொடுத்தார் அதுவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அதன் பின் இவர் இயக்கிய ”வாழை” திரைப்படம் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை அதாவது சிறுவயதில் மாரி செல்வராஜ் பட்ட கஷ்ட, நஷ்டங்களை இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார். இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரமுடன் ”பைசன்” என்ற படத்தில் பணியாற்றி வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில் படக்குழு அடுத்தடுத்த‌ அப்டேட்களை கொடுக்க தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அந்த வகையில் செப்டம்பர் 1ஆம் தேதி அதாவது இன்று மாலை 6.00 மணிக்கு இந்த படத்தின் முதல் சிங்கிள் ”தீக்கொளுத்தி” என்ற பாடல் வெளியாகயிருக்கிறது.

கர்ணன் படத்தில் வரும் கண்டா வர சொல்லுங்க பாடல் மாதிரி இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைசன் படத்தின் முதல் பாடலை கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.