அல்லு அர்ஜூன் வந்த போது பெண் நெரிசலில் சிக்கியது எப்படி?!.. வெளியான வீடியோ!...

by Murugan |
allu arjun
X

அல்லு அர்ஜூன்

Allu arjun: தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். கடந்த 20 வருடங்களாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுவரை அவர் தெலுங்கை தவிர மற்ற மொழி படங்களில் நடித்தது இல்லை. மற்ற மொழிகளில் அவருக்கும் மார்க்கெட்டும் இல்லை. ஆனால், புஷ்பா திரைப்படம் பேன் இண்டியா படமாக வெளியாகி தமிழ், ஹிந்தி மொழிகளிலும் ஹிட் அடித்தது.

இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே புஷ்பா 2 திரைப்படத்தை உருவாக்கினார்கள். சுமார் 2 வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் தள்ளி வைக்கப்பட்டது. முதல் பாகத்தின் இறுதியில் வந்து கலக்கிய பஹத் பாசிலுக்கு இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருந்தது.


400 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படும் புஷ்பா 2 படம் ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று கொடுத்துவிட்டது. படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. படம் வெளியாகி 10 நாட்களில் 1300 கோடி வரை இப்படம் வசூல் செய்துவிட்டது.

இன்னும் சில நாட்களில் இப்படம் 1500 கோடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புஷ்பாவின் வெற்றியை கொண்டாடத முடியாதபடி ஒரு சம்பம் நடந்துவிட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் டிசம்பர் 4ம் தேதி இரவு ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.


அந்த காட்சியை பார்ப்பதற்காக அல்லு அர்ஜூன் அந்த தியேட்டருக்கு வந்தார். அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் மரணமடைந்தார். அவரின் மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜூன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் 2 நாட்களுக்கு முன்பு அல்லு அர்ஜூனை கைது செய்தனர். அன்று இரவே அவருக்கு பெயில் கிடைத்தும் அவரை வெளியிடவில்லை. எனவே, ஒரு நாள் இரவு சிறையில் இருந்துவிட்டு அடுத்த நாள் காலை அல்லு அர்ஜூன் விடுதலை ஆனார்.

இறந்தவர் குடும்பத்திற்கு ஏற்கனவே 25 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார் அல்லு அர்ஜூன். அதோடு, அவர்களுக்கு என்ன உதவி என்றாலும் செய்யத்தயார் எனவும் சொல்லி இருக்கிறார். மேலும், 20 வருடங்களாக என் படம் வெளியாகும்போது தியேட்டருக்கு செல்கிறேன். இந்தமுறை இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது என சொல்லி இருந்தார்.

இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் வந்தபோது ரசிகர்கள் எப்படி முண்டியடித்தனர், அந்த சிறுவன் மயங்கியது என எல்லாமே பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story