அண்ணனாவது... தம்பியாவது... கூகுள் டாப் 10 தேடலில் அடி வாங்கிய தமிழ் ஹீரோக்கள்... என்ன இப்டி ஆச்சு?
Kollywood: கூகுளில் 2024 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்பட பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இதில் கோலிவுட் நட்சத்திரங்களின் வரிசையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
வருடத்தின் இறுதி நெருங்கி விட்டது. இதனால் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகியிருக்கிறது. இதில் முதலிடத்தை ஸ்ரீ 2 திரைப்படம் பெற்றிருக்கிறது. தற்போது மிகப்பெரிய அளவில் வசூல் குவித்து வரும் இந்த இந்தி படமான ஸ்ரீ2 ரசிகர்களிடமும் அதிக தேடலில் இடம்பெற்றுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898ஏடி ரசிகர்களிடம் அதிகம் தேடப்பட்ட படங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கமல்ஹாசன் வில்லனாகவும், தீபிகா படுகோனே முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர். விக்ராந்த் மேசே, மேதா சங்கர் நடிப்பில் வெளியான 12த் ஃபெயில் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இத்திரைப்படம் கூகுள் தேடலில் மூன்றாவது இடம் பிடித்த இந்திய திரைப்படமாக இருக்கிறது. கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான லாபாதா லேடிஸ் திரைப்படம் கூகுள் தேடலில் நான்காம் இடம் பிடித்திருக்கிறது. திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கார் விருது பட்டியலின் பரிந்துரையில் இருப்பது குறிப்பிடப்பட்டது.
பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜா என் நடிப்பில் இத்திரை திரைப்படம் இந்த ஆண்டு மிகப் பெரிய வசூல் குவித்த நிலையில் இப்போது கூகுள் தேடலில் ஐந்தாம் இடம் பிடித்திருக்கிறது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 50வது திரைப்படமாக வெளியான மகாராஜா முதல் தமிழ் திரைப்படமாக கூகுள் தேடலில் ஆறாம் இடம் பிடித்துள்ளது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் இந்த தேடலில் ஏழாம் இடம் பிடித்துள்ளது.
விஜய் நடித்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இந்த தேடலில் எட்டாம் இடம் பிடித்திருக்கிறது. இந்த பட்டியலில் இடம் பிடித்த இரண்டாவது மற்றும் கடைசி திரைப்படமாக அமைந்திருக்கிறது.
ஒன்பதாவது இடத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படமும், 10வது இடத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் வந்த ஆவேசம் திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு வெளியான நடிகர்களின் மற்ற திரைப்படங்கள் எதுவும் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது அதிர்ச்சி இருக்கிறது.