‘கூலி’க்கு இருக்கும் மிகப்பெரிய சவால்! அமீர்கான் உள்ள வந்த காரணம் இதானா?

ரிலீஸ் தேதியை நெருங்கிக் கொண்டிருக்கும் கூலி திரைப்படம் கூடவே மிகப்பெரிய சவாலையும் சந்திக்க இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டிரைலர் டீசர் என எதுவுமே ரிலீஸ் ஆகாத நிலையில் படத்தின் மீது பெரிய அளவில் ஹைப் உருவாகி இருக்கிறது. அதற்கு காரணம் முதன்முறையாக லோகேஷ் மற்றும் ரஜினி இணைந்திருப்பது தான் என ஒரு பேட்டியில் அனிருத் கூறினார்.
ஏற்கனவே அனிருத் லோகேஷ் இருவர் இணையும் படங்களில் அதனுடைய பாடல்கள் பெரிய அளவில் ரீச் ஆகும். அந்த வகையில் கூலி திரைப்படத்திலும் மோனிகா பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. எக்கச்சக்க நட்சத்திர பட்டாளங்களுடன் இந்த படம் வெளியாக இருக்கின்றது. அதனால் இந்த படம் ஆயிரம் கோடியை நெருங்குமா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறும் பொழுது தமிழ் சினிமா இன்னும் ஆயிரம் கோடி நிலைக்கு வரவில்லை .
ரஜினி நடித்தால் அது ஆயிரம் கொடியை தொட்டுவிடும் என்பதெல்லாம் சொல்ல முடியாது என்று கூறினார். இந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது ஹிந்தியில் வெளியாக கூடிய வார் 2 திரைப்படம். அந்தப் படமும் கூலி ரிலீஸ் ஆகக்கூடிய அதே ஆகஸ்ட் 14ஆம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கின்றது. ஹிந்தி மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் ரிலீஸ் ஆகின்றது. கிருத்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
அதனால் வட இந்தியா மற்றும் ஆந்திராவில் இந்தப் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இரு படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆகும் பொழுது கூலி திரைப்படத்தை விட வார் 2 திரைப்படம் சுமாராகத்தான் இருக்கின்றது என்ற ஒரு கருத்து வந்தால் தான் கூலி திரைப்படத்தின் மீது மக்களின் மொத்த பார்வையும் திரும்பும் என கூறியிருக்கிறார். இதற்கிடையில் வார் 2 திரைப்படத்திற்கு செக் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமீர்கானை லோகேஷ் உள்ளே கொண்டு வந்தாரா என்ற ஒரு கேள்வியும் இருக்கின்றது.

ameerkhan
அதற்கு பிஸ்மி கூறும் பொழுது அப்படியெல்லாம் இல்லை. ஏற்கனவே லோகேஷ் மற்றும் அமீர் கான் சந்திப்பு நடந்திருக்கிறது. அமிர்கானை வைத்து லோகேஷ் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அதிலிருந்து தொடர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இந்த ஒரு நட்பின் காரணமாக கூட கூலி படத்தில் அமீர் கானை ஒரு ரோலில் நடிக்க வைக்கலாம் என்று கூட லோகேஷ் நினைத்திருக்கலாம். அப்படித்தான் உள்ளே வந்தாரே தவிர வார் 2 படத்திற்கு செக் வைக்க வேண்டும் என்ற காரணத்தினால் அமீர்கான் உள்ளே வரவில்லை என பிஸ்மி கூறி இருக்கிறார்.