ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படம்!.. தங்கலானுக்கு இல்லாம போச்சே!..

சினிமாவை பொறுத்தவரைக்கும் தலைசிறந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. தன் வாழ்நாளில் ஒரு முறையாவது ஆஸ்கார் விருதை அடைய வேண்டும் என்ற லட்சியத்தில்தான் சினிமாவிற்குள் வருகிறான். அதுமட்டுமில்லாமல் வாழ்க்கையில் எதார்த்தமாக பேசும் போது கூட இது என்ன பெரிய ஆஸ்கார் விருதா என்றுதான் கேட்போம். அந்தளவுக்கு அந்த விருதுக்கு மதிப்பு இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த ஆஸ்கார் விருது விழாவில் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இருந்து பல சினிமா படங்கள் பரிந்துரை செய்யப்படும். பல வருடங்களாக தமிழில் இருந்து பல திரைப்படங்கள் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டும் இதுவரை ஒரு ஆஸ்கார் விருதை கூட பெறமுடியவில்லை.

இந்த நிலையில் இந்தவருடமும் தமிழில் இருந்து ஏழு படங்கள் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் ஆஸ்கார் விருதுக்காகவே படத்தை எடுத்த பா.ரஞ்சித்தின் தங்கலான், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே பல சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற கொட்டுக்காளி, அனைவரையும் பிரமிக்க வைத்த மகாராஜா, சமீபத்தில் ரிலீஸான வாழை, ஜமா, ஜிகர்தண்ட டபுள் எக்ஸ் என ஆஸ்கார் விருதை தட்டி செல்ல காத்துக் கொண்டிருக்கின்றன.

இதில் கொட்டுக்காளி திரைப்படம் இப்போது கூட ரஷ்யாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு விருதை வாங்கியிருக்கிறது. இந்த நிலையில் ஏழு படங்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் தங்கலான் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் இயக்குனரின் கடின உழைப்பையும் தாண்டி விக்ரமின் நடிப்பு, மெனக்கிடல் என அவருடன் சேர்ந்து மற்ற கலைஞர்களும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பது படத்தை பார்த்தாலே தெரிகிறது. கிடைக்குமா கிடைக்காதா என்பது ஒரு பக்கம். ஆனால் ஆஸ்கார் விருதை வாங்குவதற்காக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்றால் எவ்வளவு வெறி ரஞ்சித்திடம் இருந்திருக்கும்.


ஆனால் இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக, கிரண் ராவ் இயக்கி அமீர் கான் தயாரித்த லாபட்டா லேடீஸ் படம் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது, பெரும்பாலும் ஹிந்தி படங்கள்தான் ஆஸ்கார் விருதுக்கு தகுதியாகும். இந்த முறையும் அமீர் கானின் தயாரிப்பில் வெளியான இந்தப் படம்தான் ஆஸ்கார் விருதை தட்டி சென்றிருக்கிறது.


ஏற்கனவே பத்து ஹிந்தி படங்கள், ஆறு தமிழ் படங்கள், ஐந்து மலையாள படங்கள், மூன்று மராத்தி படங்கள் நாமினேட் ஆன நிலையில் சிறந்த அயல்நாட்டு படத்திற்கான கேட்டகரியில் லாப்பட்டா லேடிஸ் படம் தேர்வாகியிருக்கிறது.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it