அஜீத்துக்குப் போஸ்டர் ஒட்டுனவரே அவரது படத்துக்கு டைரக்டர் ஆகிட்டாரு...! யாருப்பா அவரு?

நடிகர் அஜீத்குமாருக்கு 2023 பொங்கலுக்கு துணிவு படம் வெளியானது. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது விடாமுயற்சி படம் வெளியாகி உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்துடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
குட்பேட் அக்லி: அஜீத்தின் அடுத்த படம் குட்பேட் அக்லி. இந்தப் படத்தை இயக்கி வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ல் வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே மார்க் அண்டனி என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியுள்ளார்.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால் அஜீத்தின் படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் போஸ்டரைப் பார்க்கும்போது 3 கெட்டப்புகளில் அஜீத் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரிஷா இல்லன்னா நயன்தாரா: ஆதிக் ரவிச்சந்திரனின் அப்பாவும் முன்பு சினிமாவில் எப்படியாவது இயக்குனர் ஆகிவிட வேண்டும் என்று போராடினாராம். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதை தற்போது பிள்ளை நிறைவேற்றி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இவர் 1995ல் திரிஷா இல்லன்னா நயன்தாரா என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்துடன் இயக்கும் படத்தைப் பற்றியும் அந்த வாய்ப்பு குறித்தும் ஆச்சரியத்துடன் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்கிறார்னு பாருங்க.
போஸ்டர் ஒட்டுன பையன்: அஜீத் சாருக்கு போஸ்டர் ஒட்டுன பையன். அஜீத் சாருக்காக பேனர், போஸ்டர்னு ஒட்டுன பையன் நான். அவர் கூட எனக்கு ஒரு படம் டைரக்ட் பண்ண கிடைச்சது மிகப்பெரிய பாக்கியம். இதை விட ஒரு சந்தோஷம் என்னோட வாழ்க்கையில இல்ல என்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
தற்போது இவர் அஜீத்தை வைத்து இயக்கி வரும் குட்பேட் அக்லி என்ற படத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ரிலீஸ் தேதி: 10.04.2025