ஓப்பனிங்கே விஜய்தான்! வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய தளபதி
நேற்று பிரம்மாண்டமாக ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் நடந்தது. விழாவை கண்டுகளிக்க ஏராளமான ரசிகர்கள் அரங்கத்தில் கூடினர். அரங்கமே அதிரும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்தார். அவருடன் மஞ்சு வாரியார் ராணா ரித்திகா சிங் துஷாரா விஜயன் போன்ற பல பிரபலங்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
ரஜினியின் குடும்பத்தார் அனைவருமே இந்த விழாவில் வருகை புரிந்தனர். சினிமா துறையை சார்ந்த எண்ணற்ற பிரபலங்களும் விழாவிற்கு வந்து சிறப்பித்தனர். இந்த விழாவில் ஏகப்பட்ட விஷயங்கள் பகிரப்பட்டது. கிட்டத்தட்ட 55 நிமிடம் பேசிய ரஜினி வேட்டையன் திரைப்படத்தில் நடித்ததை பற்றியும் எப்படி சமுதாயத்தில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் வழக்கம் போல அவருடைய சொற்பொழிவை கொடுத்துவிட்டு சென்றார்.
அது மட்டுமல்லாமல் ஒரு குட்டி கதையைச் சொல்லி சமுதாயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் கூறினார் ரஜினி. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் லைக்கா ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அதனுடைய வளர்ச்சி பாதை எப்படிப்பட்டவை என்பதை விளக்கும் வகையில் ஒரு வீடியோ வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழாவில் திரையில் போடப்பட்டது.
அதில் விஜயின் கத்தி படம் தான் ஓப்பனிங்காக இருந்தது. ஏனெனில் லைக்கா முதன் முதலில் கத்தி படத்தின் மூலம் தான் சினிமாவில் அடி எடுத்து வைத்தது. அதனால் அந்த திரையில் கத்தி படத்தின் விஜய் போஸ்டர் வெளியானதும் அதை பார்த்து ரசிகர்கள் சில மணி துளிகள் ஆரவாரத்தில் கத்தினர். மேடையே அதிர்ந்தது. ரஜினி விழாவில் சும்மா கெத்து காட்டினார் விஜய் என கமெண்டில் கூறி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
இதுவே விஜயின் பட ஆடியோ வெளியீட்டு விழா என்றால் நேரு அரங்கத்தை கொடுத்திருக்கமாட்டார்கள். ரஜினி படம் என்பதால்தான் அனுமதி கொடுத்திருக்கின்றனர்.