கல்கி 2898 AD 2ம் பாகத்தின் தலைப்பு இதுதான்!. செம மாஸா இருக்கே!..

Kalki 2898: பாகுபலி திரைப்படம் மூலம் பேன் இண்டியா நடிகராக மாறியவர் பிரபாஸ். பாகுபலி 2 திரைப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. அதன்பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே பேன் இண்டியா படமாக வெளியாக துவங்கியது.

இதில், கல்கி 2898 AD திரைப்படமும் ஒன்று. இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே மகாநடி என்கிற படத்தை இயக்கியவர். கல்கி 2898 AD படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இன்னும் 850 வருடங்கள் கழித்து உலகம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர். கதை நடக்கும் காலம் எதிர்காலம் என்றாலும் மகாபாரதத்தில் வந்த அர்ஜூனன், கர்ணன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.


இதில், கர்ணனாக பிரபாஸ் சித்தரிக்கப்பட்டிருந்தார். சுப்ரீம் வில்லனாக கமல்ஹாசன் நடித்திருந்தார். ஆனால், படத்தின் இறுதியில்தான் கமல்ஹாசனை காட்டினார்கள். இரண்டாம் பாகத்தில் கமலுக்கு அதிக காட்சிகள் இருக்கும் என நம்பப்படுகிறது. கடந்த ஜூன் 27ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வசூலை அள்ளியது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு 'கர்ணா 3102 BC' என தலைப்பு வைத்திருக்கிறார்களாம். மேலும், இப்படம் 2028ம் வருடம்தான் வெளியாகும் என சொல்கிறார்கள்.

அதாவது, இப்படத்தை உருவாக்க 4 வருடங்கள் தேவைப்படும் என சொல்லப்படுகிறது. என்னதான் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருந்தாலும் 2ம் பாகத்திற்காக 4 வருடங்கள் எப்படி ரசிகர்கள் காத்திருப்பார்கள் என்பது தெரியவில்லை.

Related Articles
Next Story
Share it