சிரிக்காதே பாடலை உல்டா தட்டி அடித்த அனிருத்.. வெளியானது மதராஸி இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ..
ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் ”மதராஸி”. அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்த மாதம் படம் ரிலீசாக உள்ளதால் பட குழு தொடர்ந்து அப்டேட்களை கொடுத்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. படத்திற்கு இசை அனிருத் அமைத்துள்ளார்.
அனிருத், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படத்திற்கு எப்போதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். காரணம் இதற்கு முன் அவர்கள் கூட்டணியில் வெளியான ஏழு திரைப்படங்களில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு உறுதுணையாக இருந்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த வகையில் தற்போது எட்டாவது முறையாக மதராஸி படத்திற்காக இணைந்துள்ள இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
அதை பூர்த்தி செய்யும் விதமாக முதலில் ’சலம்பல’ என்னும் லவ் பெயிலியர் பாடல் வெளியானது. அதில் இன்றைய இளம் தலைமுறைக்கு மிகவும் பிடித்த சாய் அபயங்கர் பாடி இருப்பார். பாடலும் இளம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படத்திற்கு கூடுதல் கவனத்தை சேர்த்தது. தற்போது மதராஸி படத்திற்கான இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது. அசத்தலான ரொமான்டிக் பாடலாக ’வழியுறேன்.. ’பாடலை அனிருத் பாடுவது போல் பிரமோ வெளியாகி உள்ளது.
இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த ப்ரோமோவில் வரும் பாடல் ரெமோ படத்தில் வெளியான ’சிரிக்காதே’ பாடலின் வைப் போல இருக்கிறது என்றும் அனிருத் எப்போதும் ஃபாரின் பாடல்கள் தான் காப்பியடிப்பார், ஆனால் இப்போது அவரின் பாடலையே உல்டா தட்டி அடித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் மதராஸி படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் என்ன பேசப் போகிறார் என்று அவரின் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மதராஸி இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ..
