அர்ஜுன் தாஸ் போட்ட பாம்… வெளிச்சதுக்கா இல்ல வீட்ட கொளுத்தவா!.. டிரெய்லர் ரிலீஸ்
தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புது புது கதைகள் உருவாகி ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார்கள். நான்கு சண்டைக் காட்சிகள் நான்கு பாடல்கள், குடும்ப செண்டிமெண்ட், நான்கு காமெடி காட்சிகள் என்று மசாலா படங்கள் இன்றைய காலங்களில் தமிழ் சினிமாவில் ஈடுபடவில்லை. மக்கள் வித்தியாசமான கதைகளை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில் தற்போது சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் நடிகர் அர்ஜுன் தாஸை வைத்து ”பாம்” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஷிவாத்மிகா ராஜசேகர் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காளி வெங்கட், நாசர், அபிராமி, டி எஸ் கே, பூவையார், சிங்கம்புலி, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பாம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருந்தது. ட்ரைலரை வைத்து பார்க்கும் போது இது மண் சார்ந்த கிராமப்புறங்களில் நடக்கும் கதைக்களமாக இருக்கிறது. காளி வெங்கட் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார். மயக்க நிலையில் இருக்கும் காளி வெங்கட்டை இறந்து விட்டார் என்று நினைத்து அந்த ஊர் மக்கள் அவரை தெய்வமாக வழிபாடு செய்யத் தொடங்குகிறார்கள்.
அவர் உடம்பில் இறங்கி இருப்பது எங்க குலதெய்வம் தான் என்று ஊர் மக்கள் இரு தரப்பாக பிரிந்து மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அர்ஜுன் தாஸ் செய்த வேலையால் ஊர் மக்கள் இடையே சண்டை ஏற்பட்டு அடிதடி நடக்கிறது. அப்பொழுது அர்ஜுன் தாஸ் சாமி ’வெளிச்சத்துக்கா இல்ல வீட்டை கொளுத்துவதற்கா’க என்ற டயலாக் பேசுகிறார். இறுதியில் காளி வெங்கட்டுக்கு என்னதான் ஆச்சு? ஏன் இவ்வாறு செய்கிறார்? என்பதை சஸ்பென்ஸ் உடன் முடித்திருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.
ட்ரைலரைப் பார்த்த வரையில் மண்டேலா படம் மாதிரி காமெடி மற்றும் கருத்து கலந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.
