ஹீரோவ ஓரங்கட்டுங்க! வில்லனுக்குத்தான் ஃபுல் சப்போர்ட்.. அப்படி வெளியான திரைப்படங்கள்

by Rohini |   ( Updated:2025-07-28 12:50:27  )
mysskin
X

mysskin

தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஹீரோக்களை தாண்டி வேறு எந்த கேரக்டரும் மக்களை அவ்வளவு சீக்கிரம் ஈர்ப்பதில்லை. ஆனால் ஹீரோக்களுக்கு இணையாக பேசப்படும் கதாபாத்திரம் என்னவெனில் அது வில்லன் கேரக்டர்தான். அதுவும் இப்போதெல்லாம் அந்த வில்லன் கேரக்டர்களையும் ஹீரோக்களையே செய்து விடுகின்றனர். அதனால் ஹீரோக்களுக்கும் வில்லன்களுக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

ஆனாலும் சில படங்களில் ஹீரோக்களை தாண்டி வில்லன்களை ரசிக்க வைப்பதுமாதிரியும் கதைகள் வெளியாகியிருக்கின்றன. அப்படி வந்த படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க படம் 2.0. அதில் ரஜினி ஹீரோவாகவும் அக்‌ஷய் குமார் வில்லனாகவும் நடித்திருப்பார். ஆனால் வில்லன் என்றாலே மற்றவர்களின் வாழ்க்கையை குழி தோண்டி புதைப்பது கெடுப்பது இப்படித்தான் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் 2.0 படத்தில் தான் வளர்த்த குருவிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சொந்த லாபத்திற்காக கொல்ல பின் தானே ஒரு குருவி ரூபத்தில் அக்‌ஷய் குமார் வந்து அந்த குருவிகளின் சாவுக்கு காரணமானவர்களை அக்‌ஷய்குமார் பழி வாங்குவார். அதனால் இவரை ரசிகர்கள் வில்லனாக பார்க்கவில்லை. இப்படித்தான் டிராகன் திரைப்படத்திலும் இருந்தது.

மிஷ்கின் இந்தப் படத்தில் முதலில் வில்லன் என்றுதான் அறியப்பட்டார். ஆனால் படத்தை பார்த்த போதுதான் தெரிந்தது ரவுடிசம் செய்து கொண்டிருந்த மாணவர் ஒருவரின் வாழ்க்கையை திருத்திய ஒரு பேராசிரியராக மிஷ்கின் நடித்திருப்பார். டிராகன் படத்தில் பிரதீப் ரெங்க நாதன் கேரக்டரையும் தாண்டி மிஷ்கின் கேரக்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

அதே போல் விக்ரம்வேதா படத்திலும் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் நடிக்க அதில் மாதவன் போலீஸாக நடித்திருப்பார். இன்னொரு பக்கம் கேங்ஸ்டராக விஜய்சேதுபதி நடித்திருப்பார். கடைசியில் விஜய்சேதுபதி கேரக்டர்தான் மக்களால் ஈர்க்கப்பட்டது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராவணன். ராமர் ராவணன் கதை பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ராவணனாக நடித்திருப்பார் விக்ரம். ராமாயணம் கதையில் ராவணன் தான் வில்லன். ஆனால் இந்தப் படத்தில் விக்ரமின் ராவணன் கேரக்டர்தான் பெரிதளவு ஈர்க்கப்பட்டது.

Next Story