
Cinema News
Idli kadai: காத்து வாங்கும் தியேட்டர்கள்!.. இட்லி இப்படி வேகாம போயிடுச்சே!.. இட்லி கடை பரிதாபம்!..
Idli kadai: ராயன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் நேற்று வெளியானது.. இந்த படத்தை ரெட்ஜெயண்ட் சார்பாக உதயநிதியின் மகன் இன்பநிதி வெளியிட்டிருக்கிறார். கிராமத்து வாழ்க்கை, அப்பாவின் ஆசை, தியாகம், வன்முறையில்லாமல் வாழ நினைப்பது, பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்பது போன்ற எமோஷனலான விஷயங்களை வைத்து ஒரு கதையை எழுதியிருக்கிறார் தனுஷ்.
ஹீரோ பில்டப் இல்லாமல், பன்ச் வசனம் பேசாமல், அழகான கதாநாயகியோடு ரொமான்ஸ் செய்யாமல் இப்போதெல்லாம் எந்த நடிகரும் சினிமாவில் நடிப்பதில்லை. இப்படி ஒரு கதை மற்றும் தலைப்புக்காகவே தனுஷை பாராட்ட வேண்டும் என விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், இளவரசு, அருண் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது.

இட்லி கடை முதல் காட்சி முடிந்த போதே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. ஒரு நல்ல சினிமா, பீல் குட் மூவி, கிராமத்து வாழ்க்கைக்கு தனுஷ் நம்மை அழைத்துச் செல்கிறார், இதுபோல படம் பார்த்து பல வருடங்கள் ஆயிற்று என பலரும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
ஆனால் தற்போது ரிசல்ட் வேறு மாதிரி இருக்கிறது. தமிழகமெங்கும் பல தியேட்டர்களும் நேற்று காற்று வாங்கியிருக்கிறது. சிவகங்கையில் உள்ள ஒரு மல்டி காம்ப்ளக்ஸில் 300 பேர் அமரும் ஒரு திரையரங்கில் நேற்று 40 பேர் மட்டுமே படம் பார்த்திருக்கிறார்கள். மற்ற இரண்டு தியேட்டர்களிலும் ரசிகர்கள் இல்லாமல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

வழக்கமாக தனுஷ் படம் வெளியாகும் போது அவரின் ரசிகர்கள் அலப்பறை செய்யும் சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரிலும் எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்கிறார்கள். இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. கரூர் சோக சம்பவத்தின் பாதிப்பு என சிலர் சொல்கிறார்கள். சிலரோ முதலில் இந்த படத்தின் தலைப்பு ரசிகர்களை கவரவில்லை என்கிறார்கள். ஏனெனில் தற்போது ரசிகர்கள் அதிரடி ஆக்சன், ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளை கொண்ட படங்களை ரசிக்க துவங்கி விட்டார்கள். இதுபோன்ற ஃபீல் குட் படங்களை பார்க்க மாட்டார்கள் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.
4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மற்றொரு தரப்பு இன்பநிதி படத்தை வெளியிட்டதுதான் காரணம். ரசிகர்கள் அதை புறக்கணிக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் ஒருபக்கம் வந்தாலும் ஒருபக்கம் ‘படம் சரியில்லை.. இட்லி சரியாக வேகவில்லை.. மாதம்பட்டி ரங்கராஜின் சொந்தக்கதை என நினைத்து படம் பார்க்க போனேன்.. ஆனால் மீந்துபோன இட்லியை வைத்து உப்புமா பண்ணி இருக்கிறார்கள். முதல் பாதியை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம். 2ம் பாதியை எடுக்கமாலேயே இருந்திருக்கலம்’ என்றெல்லாம் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதேநேரம் நேற்று மாலை முதல் படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் அதிகரித்து வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இட்லி கடை தனுசுக்கு வெற்றி படமாக அமைந்ததா? இல்லையா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.