யப்பா சிவகார்த்திகேயனுக்கு ஸ்டண்ட் வருமா..? மதராஸியில் சம்பவம் இருக்கு… பிரபலம் பதிலடி
இந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முருகதாஸுக்கு இந்த படம் மிக மிக முக்கியமான படம் ஏனென்றால் கடைசியாக அவர் ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்தடுத்து படங்கள் பண்ணிக் கொண்டிருந்தாலும் அது எதுவுமே பெயர் சொல்லும் அளவிற்கு கூட வெற்றி பெறவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட ஏ.ஆர்.முருகதாஸ் ”மதராஸி படம் எனக்கு கஜினி மாதிரி திரை கதையும் துப்பாக்கி மாதிரி ஆக்சன் காட்சிகளும் கொண்ட படமாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு சிறந்த இயக்குனர் என்றாலும் சமீபத்திய படங்கள் அவருக்கு எதுவும் கை கொடுக்காமல் சினிமா ரசிகர்கள் அவரை அவுட்டேடட் இயக்குனர் என்று அழைக்கின்றனர். 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரிட் இயக்குனர் தற்போது 2கே கிட்ஸ்களையும், ஜென்சி கிட்ஸ்களையும் திருப்தி படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். ஒரு வகையில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இந்த படம் வாழ்வா சாவா? போராட்டம் தான்.
செப்டம்பர் 5 படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் பறந்து பறந்து பிரமோஷன் செய்து வருகிறார். அமரன் படத்துக்கு பிறகு இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்குகிறார் சிவகார்த்திகேயன். இதுவரை காமெடி, சென்டிமென்ட் என்று கதையை ஓட்டிக் கொண்டிருந்த சிவா இந்த படத்தில் மாஸ் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு,” இந்த படத்தை பற்றி விமர்சித்துள்ளார். அதில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் பேசப்படும் காரணம். இந்த படத்தின் சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சிவா அவரின் மகன் கெவின் குமார் இந்த படத்தில் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். ஏற்கனவே தெலுங்கில் பாலையா படங்களில் குறிப்பாக அகாண்டா படத்தில் மிகப் பிரமாதமாக சண்டை காட்சிகளை வடிவமைத்திருப்பார்”.
”அந்த படத்தின் வெற்றிக்கு காரணமே இவர்கள்தான் என்று அதன் வெற்றி விழாவில் கெவின் குமாரை பட குழு கெளரவித்தது. மேலும் ஜெயலர் படத்தில் பல முக்கியமான காட்சிகளை கெவின் குமார் மற்றும் அவரது சகோதரர் இருவரும் தான் கம்போஸ் செய்திருந்தார்கள். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ரஜினியே அவர்களைக் கூப்பிட்டு பாராட்டியுள்ளார்”.
” நான் சினிமாவில் நடிக்க வரும் பொழுது எப்படி ஜூடோ ரத்தினம் அவர்களைப் பார்த்து மிரண்டு போனேனோ அதேபோல இந்த கெவின் குமார் மற்றும் அவரது சகோதரை பார்த்து வியக்கிறேன் என்று அவரே கூறியுள்ளார். அதனால் மதராஸி படத்தில் கெவின் குமார் இறங்கி அடித்துள்ளார்”.
”சிவகார்த்திகேயனை எப்பா இவருக்கெல்லாம் ஆக்ஷன் வருமா? என்று கேலி செய்தவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய பதிலடி கொடுக்கும். உண்மையில் ஒரு படம் சரியான கதை அந்த கதைக்கு தேவையான நடிகர்கள் எல்லாம் சரியாக அமைந்தால் அந்த படம் கண்டிப்பாக ஹிட்டுதான்”. என்று கூறியுள்ளார்
