தெறி ரீமேக்!.. ஹிந்தியில் பட்டையை கிளப்பியதா பேபி ஜான்?.. வசூல் விவரம் இதோ..!
தெறி திரைப்படம்: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்ட ராஜேந்திரன், ராதிகா ஆகியோர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தெறி. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் இருந்த பாடல்கள் தொடங்கி நடிகர் விஜய்யின் நடிப்பு என அனைத்துமே மிகச் சிறப்பாக இருந்தது.
தெறி ரீமேக்:
தெறி திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படமாக தயாரித்து இருக்கின்றார் இயக்குனர் அட்லி. தனது உதவி இயக்குனரான காலீஸ் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியானது.
நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கிசரப் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் மூலமாக ஹிந்தியில் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கின்றார் அட்லீ, அது மட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலமாக கதாநாயகியாக ஹிந்தியில் அறிமுகமாகி இருக்கின்றார். ஹிந்தி ரசிகர்களுக்காக சல்மான் கான் இந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து படத்தை மிகச் சிறப்பாக மாற்றி இருக்கிறார்கள் படக்குழுவினர்.
சல்மான் கானின் தீவிர ரசிகர்கள் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். நடிகர் வருண் தவானுக்கு இந்த திரைப்படம் ஒரு சிறந்த படமாக அமைந்திருக்கின்றது. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மஞ்சள் தாலியுடன் கலந்து கொண்டிருந்தார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.
கீர்த்தி சுரேஷின் அர்ப்பணிப்பை பார்த்து பலரும் வியந்து போனார்கள். வருண் தவானுக்கு இந்த திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. தெறி திரைப்படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டாலும் இப்படத்தில் சல்மான் கான் கதாபாத்திரமும், வாமிகா கதாபாத்திரமும் சற்று வித்தியாசமாக இருந்தது.
தென்னிந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருந்தாலும் ஹிந்தியில் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.
படத்தின் வசூல்:
அந்த வகையில் இந்த திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி இரவு பிரீமியர் ஷோவில் திரையிடப்பட்டது. இதில் 5 கோடி வரை வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. முதல் நாளில் இந்த திரைப்படம் 11.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
அதனை தொடர்ந்து 2-வது நாளான நேற்று படம் 4. 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆக மொத்தம் இந்த திரைப்படம் கடந்த 2 நாட்களில் இந்திய அளவில் 15.75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. உலக அளவில் 20 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கும் என்று கூறப்படுகின்றது.