தெறி ரீமேக்!.. பேபி ஜான் படம் எப்படி இருக்கு?.. ட்விட்டரில் அனல் பறக்கும் விமர்சனம்!..
தெறி திரைப்படம்: தமிழ் சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் தெறி. இந்த திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மொட்ட ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
பேபி ஜான்:
இந்த திரைப்படம் தற்போது ஹிந்தியில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு பேபி ஜான் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அட்லியின் மனைவி பிரியா ஏ பார் ஆப்பிள் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இப்படத்தை தயாரித்து இருக்கின்றார். அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இப்படி இயக்கி இருக்கின்றார்.
இந்த திரைப்படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான் நடித்திருக்கின்றார். மேலும் சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் வாமிகா கபி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிரண் கௌஷிக் பணியாற்றி இருக்கின்றார். மேலும் தமன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார்.
படத்தின் ரிவியூ:
பேபி ஜான் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று ஹிந்தியில் வெளியாகி இருக்கின்றது. தெறி திரைப்படத்தின் ரீமேக் என்பதால் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதா என்பதை ட்விட்டரில் விமர்சனமாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் பலர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அதாவது இந்த திரைப்படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இது பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏஜென்ட் பாய் ஜான் என்கின்ற கதாபாத்திரம் யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டாக இப்படத்தில் இருப்பதாக கூறி வருகிறார்கள்.
சல்மான் கான் போன்ற ஒரு மெகா ஸ்டாரை திரையில் எப்படி பயன்படுத்துவது என்பது அட்லிக்கு மிக சரியாக தெரிந்திருக்கின்றது. அந்த வகையில் பேபி ஜான் படக்குழுவினர் மிரட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். சல்மான் கானை கேமியோவாக இந்த திரைப்படத்தில் வைத்து படத்தை வேறு விதமாக மாற்றி விட்டார்கள். தியேட்டரில் சல்மான் கான் காட்சியை பார்ப்பதற்கே மிக பிரம்மிப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
தொடர்ந்து படத்திற்கு சில பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் தெறி பட அளவிற்கு சிறப்பாக இல்லை என்று சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வருண் தவான் நடிப்பு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. தெறி படத்தின் கதையில் சில மாற்றங்கள் இருக்கின்றது. மேலும் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பும் சிறப்பானதாக இல்லை என்று சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.