முதல் படமே பிளாக்பஸ்டர்... அட லிஸ்ட்ல பருத்திவீரனும் ஜெயம் ரவியும் வர்றாங்கப்பா!

முதல் படமே பிளாக்பஸ்டர் என்பதெல்லாம் பெரிய கொடுப்பினை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி வந்தால் தான் ஹீரோக்களுக்கும் அது ரொம்ப உற்சாகத்தைத் தரும். அந்த லக்கி ஹீரோக்கள் யார் யார்னு பார்க்கலாமா...

அறிமுகமான முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட்டைக் கொடுத்தது சிவாஜிகணேசன், நவரச நாயகன் கார்த்திக், பருத்தி வீரன் கார்த்தி. இவங்களைத் தவிர வேற யாராவது வர்றாங்களா என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.


முதல் படத்திலேயே பிளாக் பஸ்டர் வெற்றியைக் கொடுத்த சிவாஜி, கார்த்திக், கார்த்தியைப் போல இன்னும் மூவர் இருக்காங்க. மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெயம் ரவி ஆகிய மூவரும்தான் என்றார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஹீரோவாக நடித்த முதல் படம் பராசக்தி. இது கலைஞரின் வசனத்தில் சக்கை போடு போட்டது. படத்தில் சிவாஜி பேசும் கோர்ட் வசனம் பிரபலமானது. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

நவரச நாயகன் கார்த்திக்கின் முதல் படம் அலைகள் ஓய்வதில்லை. பாரதிராஜா இந்தப் படத்தில் தான் கார்த்திக்கையும், ராதாவையும் அறிமுகப்படுத்தினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதே போல கார்த்தி முதன் முதலாக ஹீரோவாக நடித்த படம் பருத்தி வீரன். இது அமீரின் கைவண்ணத்தில் மாஸ் ஹிட் ஆனது நாம் அறிந்த விஷயம்.

அதே போல மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் முதன் முதலாக நடித்த படம் இரவும் பகலும். ஜோசப் தளியத்தின் இயக்கத்தில் 1965ல் நடித்தார். படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

ரவிச்சந்திரன் முதல் முதலாக நடித்த படம் காதலிக்க நேரமில்லை. 1964ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் ஸ்ரீதர். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

ஜெயம் ரவி முதன் முதலாக நடித்த ஜெயம் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் தான். மற்ற கதாநாயகர்கள் இல்லையா என்றால் அவர்களுக்கு முதல் படம் அப்படி அமையவில்லை என்பதே உண்மை.

Related Articles
Next Story
Share it