பாபி சிம்ஹாவுக்கு மனைவியால நடந்த வேற லெவல் சம்பவம்… பெருமையா சொல்றீங்களே!

Bobby Simha: பிரபல வில்லன் நடிகர் பாபி சிம்ஹா மற்றும் அவர் மனைவி ரேஷ்மிக்கு இடையே நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்து இருப்பவர் பாபி சிம்ஹா. அதிலும் அவர் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பாபி சிம்ஹாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று கொடுத்தது. கேரியரை வெற்றிகரமாக கொண்டு செல்லும் பாபி சிம்ஹா 2016ம் ஆண்டு தன்னுடன் உறுமீன் படத்தில் நடித்த ரேஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கின்றனர். ரேஷ்மி தன்னுடைய கல்லூரி காலத்தில் கிடைத்த திடீர் ஆடிஷன் மூலம் இனிது இனிது படத்தில் ஹீரோவாக நடித்தார்.
அப்படம் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதை தொடர்ந்து ரேஷ்மி ஒரு சில படங்களில் நடித்தவர். திருமணத்துக்கு பின்னர் நடிப்பில் இருந்து விலகி இருந்தார் ரேஷ்மி. தற்போது மீண்டும் ரேஷ்மி சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய பேட்டி ஒன்றில், எனக்கும் என் கணவருக்கும் நிறைய சண்டைகள் நடக்கும். அப்போது என் விரல் நகங்கள் தான் என் ஆயுதம். அப்படி ஒரு முறை எங்க சண்டை நடந்த போது மூக்கில் ஏற்பட்ட காயத்துடன் நடித்து இருப்பார்.
அதை மறைக்க படக்குழு பெரிய பாடுப்பட்டது. இன்னொரு படத்தில் நான் போட்ட காயத்தை அந்த கேரக்டருக்கு அடையாளமாக மாற்றிக்கொண்டதாக ரேஷ்மி சிரித்துக்கொண்டே சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.