தன்னிடம் வேலை பார்ப்பவர்களை கமல் இப்படித்தான் நடத்துவார்! இத எதிர்பார்க்கலயே

by Rohini |
kamal
X

kamal

கமல் தன்னிடம் வேலை பார்ப்பவர்களை எப்படி நடத்துகிறார் என்பதைப் பற்றி ஒரு பிரபல இயக்குனர் பேட்டியில் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்து இப்போது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவருடைய படங்கள் பெரும்பாலும் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் ஆகவே இருந்து வருகின்றன. கமலுக்கு முன்பு எப்படி சிவாஜியை ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக பார்த்தோமோ அதைப்போல அடுத்த தலைமுறை நடிகர்கள் கமலை பார்த்து வருகின்றனர்.

அவருடைய ஒவ்வொரு படங்களும் மற்றவர்களுக்கு பாடமாகும். அவருடைய பெரும்பாலான படங்கள் பல விருதுகளை வென்று இருக்கின்றன. ஒவ்வொரு படங்களுக்கும் அவர் போடும் உழைப்பு மற்றவர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. விதவிதமான வேடங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இன்று வரை நடிப்பில் அவரை மிஞ்சிய நடிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

சினிமாவில் அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. சினிமாவில் உள்ள அத்தனை துறைகளையும் கரைத்து குடித்தவர் கமல். ஒரு என்சைக்ளோபீடியா என்றே சொல்லலாம். அவரிடம் எந்த விஷயத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு உலக அறிவும் வாய்க்கப் பெற்றவர் கமல். தற்போது பாராளுமன்ற எம்பி ஆகி இருக்கிறார். அது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அவர் தன்னிடம் வேலை பார்ப்பவர்களை எப்படி நடத்துகிறார் என்பதை பற்றி பிரபல இயக்குனர் பாரதி கண்ணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .

விஸ்வரூபம் படத்தின் போது பாரதி கண்ணனுக்கு கமல் தரப்பிலிருந்து 10 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது விஸ்வரூபம் படத்தில் ஆரம்பத்தில் ஒரு சண்டை காட்சி இருக்கும். அந்த சண்டைக் காட்சியை பாரதி கண்ணனுக்கு உறவினரான ஒருவரின் குடோனில் தான் படமாக்க்கியிருக்கிறார்கள். அப்போது அதை கவனித்துக் கொண்டிருந்தவர் பாரதி கண்ணன். அதனால் பத்து நாட்கள் அந்த குடோனில் அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.

bharathikannan

bharathikannan

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்ற வகையில் 10 லட்சம் வாடகையாக கொடுத்தார்களாம். அதில் பாரதி கண்ணன் ‘சரி 10 லட்சம் வாங்கி விட்டோம். அதில் ஒரு லட்சத்தை கமலின் மேனேஜருக்கு கொடுக்கலாம்’ என அந்த மேனேஜரை தனியாக அழைத்து ஒரு லட்சம் நீ வைத்துக் கொள் என கூறி அதை கொடுத்து இருக்கிறார். அதற்கு அந்த மேனேஜர் அதை வாங்க மறுத்தாராம். ஏனெனில் கமல்சார் எங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார். ஒன்றாம் தேதி ஆனால் போதும் சம்பளத்தை சரியாக கொடுத்து விடுவார் .அவர் எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை என்று கமலை பற்றி புகழ்ந்து கூறினாராம் அந்த மேனேஜர்.

Next Story