திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு என்ன தெரியுமா?... அடேங்கப்பா!...
Trisha: சினிமாவில் நாயகியாக 22 ஆண்டுகளை கடந்திருக்கிறார் நடிகை திரிஷா. இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் இவரைப்பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் அரசியல் கட்சி கூட இவரது பெயருக்கு களங்கம் விளைவித்தது.
ஆனால் அதையும் துணிச்சலாக எதிர்கொண்டு தான் ஒரு வலிமையான பெண் என நிரூபித்தார். இடையில் ராணா, வருண் மணியன் என திருமண பேச்சுக்களும் அடிபட்டு தற்போது அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டன. இதற்கிடையில் மவுனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த திரிஷா தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்னர், அவருடன் Surya45 படத்தில் மீண்டும் ஜோடி போட்டிருக்கிறார்.
இதன்மூலம் மீண்டும் கோலிவுட்டில் தான் ஒரு இளவரசி என நிரூபித்து இருக்கிறார். சூர்யா படக்குழு இதற்காக கேக் வெட்டி அவரை கவுரவித்தது. இந்தநிலையில் சினிமாவில் தனி ஒருத்தியாக வலம்வரும் திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் அவரது லேட்டஸ்ட் சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் தெரிய வந்துள்ளன. அதன்படி 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து உள்ளது. படத்தில் நடிக்க தற்போது ரூ.12 கோடி சம்பளமாக வாங்குகிறார்.
அடுத்ததாக இவரது நடிப்பில் விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் தனி ஆவர்த்தனம் புரிந்து வருகிறார். 41 வயதிலும் தென்னிந்திய சினிமாவில் கோலோச்சி வரும் திரிஷா விரைவில் திருமணம் செய்துகொண்டு தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
திருமண பந்தத்தில் இணைவாரா திரிஷா? காத்திருந்து பார்க்கலாம்.